பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&母冷剥 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும். அது முழுமுதல் அரணம் முற்றுதலும் அழித்தலுமாய் வருந்தன்மைத்

தாகிய நெறியை மரபாக உடைத்து.

'முதல் அரணம்’ என்றதனான் தலையும் இடையும் கடையும் என மூவகைப் படுமவற்றுள் தலையரண் அஃதாவது, அரணிற்குக் கூறுகின்ற இலக்கணம் பலவும் உடைத்தாதல். மருதத்திற்கு இது புறனாயவாறு என்னையெனின் வஞ்சியிற் சென்ற வேந்தனொடு போர்செய்தல் ஆற்றாது உடைந்து மாற்றுவேந்தன் அரண் வலி யாகப் போர் செய்யுமாகலானும், அவர் நாட்டகத்தாகலானும், அவ்வழிப் பொருவார்க்கு விடியற்பொழுது காலமாகலானும் அதற்கு இது புறனாயிற்று." நாட்டெல்லையின் அழிப்பு உழிஞை யாகுமோ எனின், அது பெரிதாயின் அதன்பாற்படும்; சிறிதாயின் வெட்சியுள் ஒதின ஊர்கொலை புறத்திணை. யுள் அடங்கும்.” (அ)

உழிஞை தானே மருதத்துப் புறனே

இஃது உழிஞைத்திணை அகத்திணையுண் மருதத்திற்குப் புறனா மென்கின்றது.

(இ.ஸ்.) உழிஞை தானே-உழிஞை யென்று கூறப்பட்ட

பறத்திணை, மருதத்துப் புறனே-மருதமென்று கூறப்பட்ட அகத் திணைக்குப் புறனாம் என்றவாறு.

இருபெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர்செலற் காற்றாது போய் மதிலகத் திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மை யும் மருதத்திடத்த தாதலானும், அம்மதிலை முற்றுவோனும்

1. புறத்தோ னாகிய உழிஞையானது தொழில் முற்றுதல் எனவும், அகத் தோனாகிய நொச்சியானது தொழில் (முற்றுதலை விலக்கித் தனக்குரியதாகக்) காத்துக்கொள்ளுதல் எனவும் இகவர் தொழில்களும் ஒருங்கு இணைந்ததே உழிஞைத்திண்ையாம் எனவும் புலப்படுத்துவார் முற்றலும் கோடலும் அனை நெறி மரபிற்றாகும் என்ப? என்றார் ஆசிரியர்.

2. மேற்சொல்லுதலாகிய போர்த்தொழிலை மேற்கொண்ட வஞ்சித்திணை மன்னனொடுபோர் செய்தலாற்றுறாது தோற்றுத் தனது அரணுட்புக்கிருந்த வேந்தன் தனது அரணைத்துணையாகக் கொண்டு போர் செய்தல் இயல்பாத லானும் அவனது அரண் நாட்டகத்து அமைந்திருக்குமா கல தும் அவ்வழி அரணின் புறத்தும் அகத்தும் இருந்து போர் செய்வார்க்கு விடியற் காலம் ஏற்பு டையதாதலானும் மருதத்திற்கு உழிஞை புறனாயிற்று என்பர் இளம்பூான ர்.

3. பகைவரது நாட்டெல்லையின் அழிப்பு பெரிதாயின் அஃது உழிஞைத் திணையாம் எனவும், சிறிதாயின் வெட்சித் திணையுள் ஒதிய ஊர்கொலை என்னும் துறையுள் அடங்கும் எனவும் வரும் இவ்விளக்கம், இளம்பூரண ருரையில் ‘முழுமுதல் அரணம் முற்ற லும் அழித்தலுமாய் எனப் பிழைபட்ட உரைத்தொட ருக்குப் பின்வந்தாரொருவரால் எழுதப்பெற்றிருத்தல் வேண்டுமெனக் கருத வேண்டியுளது. -