பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கப் கடன்

இனித் தேவர்க்குரியவரக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறு வராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் 'றமிழ் கூறு நல்லுலகத் தன அல்லவென மறுக்க." இனி முரசு ழிஞை வேண்டுவா ருளரெனின் முரசவஞ்சியுங் கோடல் வேண்டு

மென மறுக்க."

இனி ஆரெயிலுழிஞை முழுமுதலரணம் என்றதன்கண் அடங்கும்.”

இனி இவற்றின் விகற்பிப்பன வெல்லாம் அத் துறைப்பாற் படுத்திக்கொள்க. (a 2-) பாரதியார்

கருத்து - இது, மேல் நாலிரு வகைத்தே எனத் தொகுத்து

உழிஞை வகைகளின் பெயரும் இயல்பும் கூறுகிறது.

பொருள் :- 1. கொள்ளார். தேஎம் குறித்த கொற்றமும். பகைவர் நாட்டைக் கொள்ளத் துணியும் வீறும்.

குறிப்பு :- உள்ளின் விரைந்து * முடிக்கும் உறுதி பற்றிக் குறித்த கொற்றம் என்றிறந்தகாலத்தாற் கூறப்பட்டது.

2. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்-எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய திறலுடைய வேந்தன் சிரும்;

3. தொல் லெயிற்கு இவர்தலும்-பகைவர் முன் பற்றாத பழமையான மதிலைப் பற்றி முற்றியோர் ஏறுதலும்,

1. தேவர்க்குரியனவாக அமைந்தவை கந்தழி, முற்றுநிஞை, காந்தள் என்னுந் துறைகளாகும். இவை முறையே திரும்ால், சிவன், முருகன் ஆகிய தெய்வங்களின் போர்ச் செயல்களைக் குறிப்பனவாக உழிஞைப் படலத்துள் ஆயனாரிதனார் குறித்துள்ளார். மக்களைப் பொருளாகக் கொண்டு நிகழும் உலகி யலாய் எக்கன்லத்தும் நிகழ்தற்குரிய புறத்தினையொழுகலாற்றில் ஏதோ છે (5 காலத்து ஒருவர் வேண்டிய செய்தனவாகிய தெய்வங்களின் செயல்களைத் துன்) களாக அமைத்தல் பொருந்தாது என்னும் கருத்துப்பட அவை தமிழ் க், றும் நல்லுலகத் தன அல்ல' என மறுத்தார் நச்சினார்க்கினியர்.

ஆ. முர ச வுழிஞை என ஒரு துறை கூறியவர் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர்.

வீரர்களின் போர்ச்செயலை ஊக்குவிக்கும்கருவியாகிய முரசத்தை உழிஞைத் தினையொடும் இயைத்து முரசவழிஞை என ஒரு துறையினை அமைத்துக் கொண்டால், அதுபோலவே வலம்படுவியன் பணை என்றாற் போன்று வெற்றி முரசம் முழங்கப் பகைவர் மேற்சேறலாகிய வஞ்சித்தினையொடும் இபைத்து 'முரச வஞ்சி' எனவும் ஒரு துறை கொள்ளுதல் வேண்டும். அங் வன்ம் அவர் கொள் ளாமையால் அவர் கூற்று மிகைடடக்கூறல், குன்றக்கூறில் என்னுங் குற்றங்களின் பாற்பட்டு மறுக்கப்படும் என்பதாம்.

3. புறப்பொருள் வெண்பாமாலையாசிரியர் கூறும் ஆரெயிலுழி னகு: என்னு ந் துறை முழுமுதலரணம்’ என அடைபுணர்த்தோதன்பட்ட தெ ல்காப் பியத் தொடரிலேயே அடங்கும் என்பது கருத்து.