பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பாகக &な_す?

மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர்பக்கமும்மதின்மேற்கோடற் குப் பரந்த மதிலோர் பக்கமும்.

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் தம்முடன் இகலி மதில்மேல் நின்றானை அட்டு அவன் முடிக்கலங் கொண்ட மண்ணு மங்கலமும்.

வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - வென்ற வாளின் மண்ணு மங்கலமும் பொருந்த,

தொகைநிலை-அம்மதிலழித்தமையான் மற்றுள்ள மதில்கள் வரைப்பில் மாறுபட்ட வேந்தரும் முரண் அவிந்தபடி யடைதல்.

என்னும் துறையொடு தொகை_இ வகை நால்மூன்று என மொழிப-என்னும் துறையொடு கூடிய உழிஞை வகை பன்னி ரண்டு என்று கூறுவர்.

நச்சர் :

ජී% ද් ,

இஃது எய்தாத தெய்துவித்தது; உழிஞைத்திணையுள் இரு பெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறை இதற்கு முன்னர்க் கூறாமையின்,'

(இ-ள்.) குடையும் வாளும் நாள்கோள் அன்றி-தன் ஆக்கங் கருதிக் குடிபுறங்காத்து ஒம்பற்கெடுத்த குட்ைநாட் கொள்ளு தலும் அன்றிப் பிறன்கேடு கருதி வாணாட் கொள்ளுதலும் அன்றி,"

புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாள்கொள்ளு மென்க. தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞையென்ப் படாதாகலின், அகத்தோனும் முற்று விடல் வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித் தானும் புறத்துப் போதரு தற்கு நாட்கொள்ளும் நாள்கெர்ளலாவது நாளும் ஒரையுந் தனக் கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஒர் இடையூறு

r 1. உழிஞைத் திணையில் அரன்னினை வளைத் துக்கொள்வோராகிய புறத் து.ழிஞையார், பகைவர் முற்றுகையினின்றும் அர ணினை மீட்டுக் கொள் வோராகிய அகத்துழிஞையார் ஆகிய இருபெரு வேந்தர்க்கும் ஒருங்கேயுரியனவாகிய துறை களை விரித்துக்கூறுவது இந்து ற்பாவாகும். -

2. அரசன் தனது நாட்டு மக்களின் ஆக்கத்தினைக் கருதிக் குடிமக்களைத் தண்ணிழல் தந்து பாதுகாத்தற்கு அறிகுறியாயமைந்த தனது வெண்கொற்றக் குடையினைப் பகைவர் இருந்த திசைநோக்கி நல்லநாள் பார்த்துச் செல்ல விடுவது குடை நாட்கோள் எனப்படும்.