பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& FO தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

4. கடைஇச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும் - முற்றியோன் தன் மறவரைச் செலுத்தி எதிர்த்தோரை மலைந்து மதிற்புறப் போர் முடிந்து ஒழியுமாறு வென்று எயிலைக் கைப்பற்றி உள்ளேறி அரணக மறவரைச் சூழும் முனைப்பும்.

5. முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் - புறத்தோரால் வளைக்கப்பெற்ற அகப்படைத் தலைவன் அரண் காவல் விரும்பிப் புரியும் அமராம் நொச்சியும்.

(வீழ்தல் - விரும்புதல். நொச்சி மதில்; அது மதிற் காவற்கு ஆகுபெயர்)

6. அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையும் - அவ்வெதிர்ப் பால் வெகுண்டு புகுந்த புறப்படைத் தலைவன் விரும்பும் புதுக் கோளும்.

(எதிர்ப்பாரை அடர்த்து அவர் நிலையிடத்தைப் புதிதாய்க் கொள்ளுதல் புதுமை எனப்பட்டது.) (மற்று, அசை)

7. நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் - எயிற் புறத்து நீர் நிலையில் (அகற்ற ஒழியாது வந்து விரவும் பாசிபோல) இருதிறப் படையும் தளர்ந்தகலாமல் மேன்மேல் விரும்பிக் கலந்து மலையும் பாசித் துறையும்.

(விட்டு விலகாது விரைந்து விரவும் நீர்ப்பாசி போலக் கலந் திரு படையும் மலைந் திருதலையும் அலையெனமோதும் அமரின் பரிசு, பாசி எனப்பட்டது)

8. அதாஅன்று-அதுவுமன்றி, ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அரணகத்து ஊரில் அமர் விரும்பி ஒருவரை ஒருவர் முனைந்து பொரும் அப்பாசிப் போரின் தறுகண்மையும்.

(மற்று, அவை. அதன் மறன் என்பது அண்மைச் சுட்டாய் மேற்பாசி மறனைச் சுட்டும்)

9. மதின்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் - மதின்மேல் ஏறி அகற்றப்படாது ஊன்றிய மறவர் பரிசும்.

10. இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும் - பகை மதிலின் முடியகப்படுத்திய பெருமிதம் கொண்டாடும் நீர்விழாவும். (இதில் குடுமியை மதிலுக்கு ஆக்காமல் பிரித்து ஆகுபெயராக் கிப் பிறர் குடுமி எனக்கொண்டு, காவலர் முடிக்கலம் எனப் பிறர் கூறுதல் பொருந்தாமை வெளிப்படை. வேந்தனுக்கல்லால் மதில் காக்கும் மறவர்க்கெல்லாம் முடிக்கலம் இன்மையானும், முற்றிய மதின்மேல் முடிவேந்தன் ஏறி முடி பறிகொடுத்தல் இராவணற்