பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கஉ

శ్రీ శ్రీ పాf

பாரதியார்

கருத்து :- இது, தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் எனக் கூறுகிறது.

பொருள் :- வெளிப்படை.

குறிப்பு :- ஏகாரம், முன்னது பிரிநிலை; பின்னது அசை, நெய்தல் போலவே தும்பையும் ஆர்ப்பு, அலைப்பு, இரங்கல் இவற்றிற்கு இடனாதலானும், நெய்தலில் புலம்புறு தலைவியர் இரங்கல் ஓயத் தலைவர் கார்காலத்தே மீளுதல் போலத் தும்பை யில் அமரோய்வு கார்காலத்தாதலானும், நெய்தற்குரிய பரந்த மென்னில வரைப்பு போர்க்குச் சிறந்துரியதாதலானும் நெய்தலுக் குத் தும்பை புறனாயிற்று.

12. (3).

கருத்து :- இது, தும்பைத்திணை இயல்பை விளக்குகிறது.

பொருள் :- மைந்து பொருளாக வந்த வேந்தனை -தன் வலியை மதித்து இகலி வந்த வேந்தனை; சென்று தலையழிக்கும் சிறப்பிற்று என்ப-எதிர்த்துப் போய்ப்பொருதடக்கும் சீருடைத்து தும்பைத் திணை என்பர் புறநூற் புலவர்.

குறிப்பு :- தும்பைத்திணை என்னும் எழுவாய், பொருட் டொடர்பால் முன் சூத்திரத்தினின்றும் பெறப்பட்டது. 'தும்பை இருபடையும் ஒருங்கு மலையும் போர் குறிப்பதால், வந்த வேந்தனை இருந்த மன்னவன் எதிருன்றிப் பொருதலும் அவ்வாறு தடுத்தெதிர்த்தவனை வந்தோன் அடுத்தமர் தொடுத் தலும், ஆகிய இரு திறமும் அடங்கச் சூத்திரம் அமைந்த செவ்வி கருதற்குரியது."

எதிர்த் திருவர் மலைவதே போராதலின், போர் குறிக்கும் தும்பையின் வேறாக எதிருன்றலைக் காஞ்சி என வேறு திணை யாகக் கொள்ளும் பின்நூற் கொள்கை மிகையாதல் வெளிப்படை, அதுபற்றியே தொல்காப்பியர் எதிருன்றலைக் காஞ்சியெனக் கூறிற்றிலர்.

1. மைந்துபொருளாகத் தன்னை நோக்கிவந்த வேந்தனைத் தானும் மைந்து பொருளாக அவனை எதிரேற்றுச் சென்று ஒரு களத்துநின்று பொருதழிக் குஞ்சிறப்பினது தும்பை எனத் தொல்காப்பியனார் விளக்கு தலால், பொருவோர் இரு திறத்தார்க்கும் உரிய வருதலும் செல்லுதலுக கிய இருதொழில்களும் இணைந்து நிகழ்தற்குரிய ஒரிடமே இரு திறத் தாரும் எதிர்நின்று பொருதற்குரிய போர்க்களம் என்பது பெறப்படுகலின் வேந்தர் இருவச் சேனையும் ஒருகளத்து

எதி நின்று பொரும் போர் நிகழ்ச்சியே தும்பையென் னுந் திணையாதல் நன்கு புலனாம்.