பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ද්% ඵ් දා. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சிநூலும் அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஒத்து. எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின்’ அகத்தியந் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஒத்தாயென்றுணர்க. இவை யெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம்.

இனித் தமிழ்ச் செய்யுட்கண்ணும் இறையனாரும் அகத்திய னாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாரும் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும் இடைச்சங்கத்தார் செய்தன இடையுங், கடைச்சங்கத்தார் செய்தன. கடையுமாகக் கொள்க.

இங்ஙனம் ஒத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பையுஞ் சிறப்பின்மையையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமுங் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம்.

இனி ஒதுவிப்பனவும் இவையேயாகலின் அவைக்கும் இப் பகுதி மூன்றும் ஒக்கும். ஒதுவித்தலாவது கொள்வோனுணர்வு வகை அறிந்து அவன் கொளவரக் கொடுக்கும் ஈவோன்றன்மை யும் ஈதலியற்கையுமாம். வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தி யாயினும் உலகியற்றீயாயினும்’ ஒன்றுபற்றி மங்கல மரபினாற் கொடைச்சிறப்புத் தோன்ற அவிமுதலியவற்றை மந்திரவிதியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி, வேளாண்மைபற்றி வேள்வி யாயிற்று. வேட்பித்தலாவது, வேள்வியாசிரியர்க்கோதிய இலக் கணமெல்லாம் உடையனால் மாணாக்கற்கு அவன் செய்த வேள்விகளாற் பெரும்பயனைத் தலைப்படுவித்தலை வல்லனாதல்; இவை மூன்று பகுதியவாதல் போதாயனியம் முதலியவற்றா னுணர்க. கொடுத்தலாவது, வேள்வியாசானும் அவற்குத் துணை யாயினாரும் ஆண்டு வந்தோரும் இன்புறுமாற்றான் வேளாண்மை யைச் செய்தல். கோடலாவது, கொள்ளத் தகும் பொருள்களை அறிந்து கொள்ளுதல். உலகுகொடுப்பினும் ஊண் கொடுப்பினும் ஒப்பநிகழும் உள்ளம் பற்றியுந் தாஞ் செய்வித்த வேள்விபற்றியுங்

1 இனிமை பயின்று வருதலின்’ 2. உறழ்ச்சிநூல்-தருக்கம் 3. ஐந்தீயாவன :

முத்தீயாவன : ஆகவனியம், கா ருகபத்தியம், தக்கினாக்கினி உலகியற் lயாவது : சோறு சமைத்தல் முதலாக உலகியல் வாழ்விற் பயன்படுத்தப்பெறுவது, இவை--இவ்வேள்விகள்;

- மூன்றுபகுதியவாதல் (பாடம்) 4 மாணாக்கனை.