பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ੋੇ ੈ; தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

வியலின் இச்சூத்திரத்தும் தமிழரை இரு மூன்று வசையின் ஏனோர் என்றடங்கக் குறிப்பதே அவர்கருத்தாமெனத் தேர்வது பொருத்தமாகும். அகத்திணை குறிக்கும் அடியோர் பிறர் போல் இன்ப ஒழுக்க மேற்பாராயினும் தாம் பிறர் உடைமை யாய்த் தணிவினையுரிமை தமக்கில ராதலின், வாசைக் குரியா ராகாரென்பது வெளிப்படை. அவரொழியத் தமிழர் அறுவகை யாரே வாகைக்குரியர்.

இப்பழந் தமிழ் மரபுகள் கருதாமல், முன் உரைகாரர் இங்கு முதல் மூன்றடிகளும் வடநூல் வருண வேறுபாடுகளை அவரவர்க் கறுதியிட்டு வகுத்த தொழிற்றொகுதியுடன் இங்குக் குறிப்பன போலக் கொண்டு பொருந்தாப் பொருள் கூறி யிடர்ப்படுவர். தொல்காப்பியரின் துணிந்த நோக்கும், சூத்திரச் சொற்றொடர்ப் போக்கும் தெற்றெனத்தெளிக்கும் செம்பொருளைச் சிந்தியாமல், பழங்கால வழக்குகளை யறியாததால் தாமறிந்த தங்காலப் பிற நூற் கொள்கைகளை அறப் பழந் தமிழ் நூலுட் புகுத்த முயன் றவர் மயங்கலாயினர். இங்கு வருண கரும வரையறை விளக் குவது கருத்தாமேல், அதைத் தெளிக்கும் சொற்பெய்தல் எளிதாகும். அதற்கு மாறாகத் தொழிற் சுட்டொழித்துக் குடி சுட்டும் மரபுச் சொற்பெய்தமைத்த சிறப்பின் குறிப்புச் சிந்திக்கற் பாற்று.

'இருமூன்றுமரபின் ஏனோர்’ என்பதற்கு அறுவகைப்பட்ட தமிழ்க் குடிகள் எனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்ற வில்லை. இவ்வறுவகை ோருமே தமிழ்க்குடி கள் எனின் இந்நூற்பாவில் முற்குறித்த பார்ப்பாரும் அரசரும் பிற்கூறும் அறிவரும் தாபதரும் பொருநரும் தமிழ் மக்களின் வேறுபட்ட இன் த் தவரோ என ஐயுறுதற்கிடமுண்டாதலும் இங்கு எண்ணத் தகுவதாகும்,

தமிழகத்தில் நாள் வருணப்பாகுபாடு என்றும் இல்லாமையால் ஆரியர் கலப் பிற்குப்பின் பிற்காலத்துப் புகுந்த மிருதி நூற்கோட்டுபாடுகளை இயைத்துத் தொல்காப்பிய நூற்பாக்களுக்கு நச்சினார்க்கினியர் முதலிய பிற்கால உரையாசிரி யர்கள் வரைந்துள்ள உரை தொல்காப்பியன ர் கருத்துக்கு ஒத்ததன்று என வற்புறுத்துவதே நாவலர் பாரதியார் அவர்கள் எழுதியுள்ள உரைப்பகுதியின் நோக்கமாகும்.

இனி, ஏனோர் என்பது, முற்குறித்த பார்ப்பார் அரசர் நீங்கலாக எஞ்சியுள்ள குடிமக்கள் அனைவரையும் குறிப்பதாகும். இச்சொல் வணிகர் வேளாளர் என்னும் இருதிறத்தாரை மட்டும் குறித்ததெனக் கொண்டு இரு திறத்தார்க் கும் தனித்தனியே உரியனவாக இருவேறு அறுவகைத் தொழில்களைப் பகுத் து சைப்பர் உரையாசிரியர்கள். மக்களைக் குறிஞ்சி முல்லை முதலிய நிலவகையாற் பகுத்துரைத்தலன்றி திறவகையாற் பகுத்துரைக்கும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்தில் தமிழகத்தில் இடம் பெறாமையானும் தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தலாகிய வாகைத்திறம் வணிகர் வேளாளர் என்னும் இருதிறத்தார் க்கு மட்டுமின் றி நானில மக்கள் அனைவர்க்கும் உரிய தொன் றாதலானும் இருமூன்று மரபின் ஏனோர்’ என் பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் பொருந்தாமை புலனாம்.

இனி இருமூன்று மரபின் ஏனோர் பக்கம் என்பது மரபால் அறுவகைப்பட்ட தமிழ்க் குடிகளைக் குறித்ததாகக் கொண்டு இரு மூன்று மரபினராவர் ஆயர், குறவூர், உழவர், பரவர், வினைவலர், ஏவன்மரபினர் எனவும் இவரல்லாத அடியோர் வாகைக்குரியவர் ஆகார் எனவும் விளக்குவர் நாவலர் பாரதியார்,