பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2- 2–0 தொல்காப்பியம்-பொருளதிகாரம்- உரைவளம்

இவற்றான் உழவஞ்சாமையும் பகையஞ்சாமையுமாகிய வெற்றி கூறினார், பக்கமென்றதனாற் புனிற்றாவுங் காலா ளுத் தேருங் கொள்க."

கட்டில் நீத்த பாலினானும்’-அரசன் அரசவுரிமையைக் கை விட்ட பகுதியானும்;

அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி.

உதாரணம் :

"கடலு மலையுந் தேர்படக் கிடந்த மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினு நொய்தா லம்ம தானே யிஃதெவன் குறித்தன் னெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை யிராமன் றம்பி யாங்கவ னடிபொறை யாற்றி னல்லது முடிபொறை யாற்றலன் படிபொறை குறித்தே.’’

இஃது அரசு கட்டினித்த பால்.

'பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில மொருபக லெழுவ செய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட் டனரே காதல சதனால் விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரி வள் விடப்பட் டோரே' (புறம்-கட்டு அ

என்பதும் அது.

எட்டுவகை நுதலிய அவையத்தானும்-எண்வகைக் குணத்தி னைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும்:

அவை குடிப்பிறப்பு கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவு நிலைமை அழுக்காறின்மை அவாவின்மை எனவிவை யுடையராய், அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல்.

1 , எருதும் எருமையும் ஆகிய பகட்டினால் அமைந்த சான்றோர் என்றது உழவரையும், யானையையும், குதிசையையும் ஆகிய மா வினால் அமைந்த சான் றோர் என்ற து வாளேருழவராகியபோர் வீரரையும் குறித்தன. இவை முறையே உழவு அஞ்சாமையும் பகையஞ்சா மையும் ஆகிய வெற்றியைக் குறித்தன வாகும,

2. கடிமனை நீத்தபாலின் கண்ணும் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். -