பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக உசடு

'நகுதக் கனரே நாடுeக் கூறுநர் மடங்கலிற் சினை இ' என்னும் (எ.உ, எக) புறப்பாட்டுகள் உயிருஞ் செல்வமும் போல்வன நிலையும் பொருளென நிலையாது வஞ்சினஞ் செய்தன.

இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்-இனிதாகிய நகையினையுடைய மனைவி தன் கணவன் புண்ணுற்றோனைப் பேய் தீண்டுதலை நீக்கித் தானுந் தீண்டாத காஞ்சியானும்;

என்றது, நகையாடுங் காதலுடையாள், அவனைக் காத்து விடிவளவுஞ் சுற்றுதலன்றி முயங்குதற்கு உள்ளம் பிறவாதபடி அவன் நிலையாமையை எய்தினா னென்றவாறு.

இதுவும் ஆண்பாற்காஞ்சியாம். இக் காஞ்சியென்பதன்ை முன்னும் பின்னுங் கூட்டுக.

நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சி யானும்-உயிர் நீத்த கணவன் தன்னுறவை நீக்கின. வேல்வடு வாலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியானும்;

எஞ்ஞான்றும் இன்பஞ்செய்த கணவனுடம்பு அறிகுறி தெரி யாமற் புண்பட்டு அச்சுநிகழ்தலின், யாக்கை நிலையாமை கூறிய தாம். பேஎத்த என்பது உரிச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயரெச்சம். அஞ்சின, ஆஞ்சி யென நின்றது.

இன்ப முடம்புகொண் டெய்துவின் காண்மினோ வன்பி னுயிர் புரக்கு மாரணங்கு - தன்கண வ ளல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே புல்லார்வேன் மெய்சிதைத்த புண்'

(தகடூர் யாத்திரை-புறத்திரட்டு-மூதின் மறம்.அ)

என வரும்.

இனி வேலிற்பெயர்த்த மனைவி யென்று பாடமோதி, அவ்

வேலான் உயிரைப்போக்கின மனைவி யென்று கூறி, அதற்குக்

"கெளவைநீர் வேலிக்க டிதேகாண் கற்புடைமை வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோ-னவ்வேலே யம்பிற் பிறழுந் தடங்க ணவன் காதற் கொம்பிற்கு மாயிற்றே கூற்று'

(புறப் வெ-மாலை, காஞ்சி-உகட) என்பது காட்டுப.*

1. நீத்த கணவற் றீர்த்தவேலின் மனைவி பேஎத்த ஆஞ்சியானும் என

இயைத்து உரை வரையப்பட்டுள்ளது.

'அஞ்சின காஞ்சி? ஆஞ்சியென நின்றது என்றிருத்தல் வேண்டும். 2. இங்ஙனம் உதாரணங்காட்டியவர் இளம்பூரணர்