பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

စ္သို႕

புறத்திணை இயல்-நூற்பாக

இனி, திணையனைத்தும் ஒன்றிலொன்றடங்கா அகமும் புறமுமா யிருவேறு வகைய மெனக் கொண்டபிறகு, திணை எதுவும் ஒன்று அகத்தது அன்றேல் புறத்தது எனப்படுதலன்றி. அகப்புறமாமென்றோர் புதுவகைப்படுத் தெண்ணுவது, பொய் பொய்யேயாவதன்றி,தனிப்பொய், பொய்ப் பொய், மெய்ப் பொய் என முத்திறப்படுமெனல் போல், பொருளொடு பொருந்தாப் போலி முறையேயாகும். புறமெதுவும் அகவகையாகாதது போலவே, அகமெதுவும் எனைத்து வகையானும் புறனாகாமை யும் ஒருதலையாத் தேறப்படும். அகத்தில் தனியகம் அகத்தகம் புறத்தகம்எனும்பாகுபாடின்மையால் புறத்துள்ளும்புறமேயன்றிப் புறப் புறமும் அகப்புறமும் வேறுகோட லமையாமையறிக. மெய்ப் பொய்-ஒளியிருள்-பகவிரா என்பனபோலவே அகப்புறத்திணை யொன்று கருதுமாறில்லை. இயல் வேறுபட்ட இருவகைத் திணைகளைப் புணர்த்து அகப்புறமெனப் புதுவதோர் விரவுத் திணை வகுத்த தோடமையாமல், புறப்புறமென வொருவகை கோடல் எற்றுக்கு? அகத்தின் வேறு புறமாதல்போல, புறத்தின் வேறுபடுவது அகமேயாகும். மற்றைய புறப்புறமென்பது பொரு வரில் கூற்றாம். கைக்கிளை முதலாப் பெருந்தினையிறுவாய் ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்குப் புறனாவதன்றிப் புறப்புறமெனல் ஆகாமை யுணர்க எனக் காஞ்சிச் சூத்திரவுரை யில் இம்முறையல்லா முறையை நச்சினார்க்கினியரும் மறுத்துரைக் கின்றார் பொருவோரிருவருள் ஒருவர் வெல்லுதல் போரி னியல் முடிபாகும். இதில் போராம் தும்பையைப் புறனாக்கி, போரில் வேறலாம் வாகையைப் புறப்புறமென வேறுபடுத்துவதேன்? தனிவேறியல்புடைய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பைகளை யெல்லாம் அகத்தில் வேறாம் பொதுவியல்கொண்டு புறமெனு

1. அன்பின் ஐந்திணையாகிய அகவொழுக்கத்தின் வரம்பினைக் கடந்த அகவொழுக்கமே அகப்புறம் எனப்படும். அமர்கொள் மரபின் புறத்திணைப் பகுதி களாகிய போர் நிகழ்ச்சிகளாய் அடங்காது அந்நிகழ்ச்சிகளின் பயனாகவும் அந் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய ஒழுக்கங்களாகவும் அமைந்தனவே புறப்புறம் எனப்படும். இப்பகுப்பு, தொல்காப்பியனார் விளக்கிய அகம்புறம் என்னும் இரு வகை ஒழுகலாறுகளையும் அவற்றிடையே அமைந்துள்ள நுண்ணிய வேறுபாடு களையும் கூர்ந்துணர்ந்து கொள்ளும் முறையில் அவ்விருதினைகளையும் மேலும் இரண்டிரண்டாகப் பகுத்து விளக்கும் பகுப்பு முறையேயன்றித் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணான பகுப்பன்று எனத் தெளிந்துணர்தல் வேண்டும். தொல் காப்பிய எழுத்ததிகாரத்துக் கருவி செய்கை எனப் பகுத்துரைக்கப்பெறும் இருதிற விதிகளையும் அகக்கருவி, புறக்கருவி, அகப்புறக்கருவி, புறப்புறக்கருவி என்வும் அகச்செய்கை, புறச்செய்கை, அகப்புறச் செய்கை, புறப்புறச் செய்கை எனவும் நுண்ணிய வேறுபாடு கருதி உரையாசிரியர்கள் பகுத்துணர்த்திய பகுப்புமுறையும், அகம் புறம் எனப்பட்ட இருவகைச் சம பல்களையும் அகச்சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், புறப்புறச் சமயம் எனப் பின்வந்தோர் பகுத் துணர்த்திய பகுப்பு முறையும் இங்கு ஒப்பு:நோக்கத்தக்கனவாகும்.