பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-டு శ్రీ శ్ర్కీ

'அன்றுகொ ள பெயர் தாமரில் வீழ்ந்தோன்கற் கின்றுகொள் பல்லா னிலமெல்லாங்-குன்றாம ற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள்

வைம் மினோ பீடம் வகுத்து.'

இஃது அதற்குச் சிறப்புப் படைத்தது.

வாழ்த்தல்-கால் கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்தலும், பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வ மாக்கி வாழ்த்தலுமென இருவகையாம்.

உதாரணம்:

“ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்த விந்த

நீவாழ வாழிய தின்னடுக லோவாத

விற்கோட்ட நீண்ட தோள் வேந்தன் புலி பொறித்த

பொற் கோட் டிமயமே போன்று.'

இது கல்வாழ்த்து. 'பெருங்களிற்றடியில்’’ என்னும் (உ.சு.க.) புறப்பாட்டில் தொழாதனை கழிதலோம்புமதி' என வாழ்த்தியவாறு காண்க.

என்று இரு மூன்று வகையிற் கல்லொடு "புணர-என்று முன்னர்க் கூறப்பட்ட அறுவகை இலக்கணத்தையுடைய கல்லொடு பின்னரும் அறுவகை இலக்கணத்தையுடைய கற்கூடச் சொல்லப் பட்ட-இக் கூறப்பட்ட பொதுவியல்; எழுமூன்று துறைத்துஇருபத்தொரு துறையினையுடைத்து என்றவாறு.

ஆரமரோட்டன் முதலிய எழுதுறைக்குரிய மரபினையுடைய கரந்தையும், அக் கரந்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற் கூறிய கல்லுங் கூடக், காந்தளும் பூவும் வள்ளியுங் கழனிலையும் உன்னநிலையும் பூவைதிலையும் உளப்பட இச்சொல்லப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை யுடைத்தெனக் கூட்டுக. மாயோனிறம்போலும் பூவைப் பூ நிறமென்று பொருவுதல் பூவை நிலையென்றால், ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களை

7. காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்த குமரபிற் பெரும்படை, ஆாழ்த்தல் எனக் கற்கோள் நிலை ஆறினையும் விதந்தெடுத்து எண்ணிய பின்னரும் இருமூன்று வகையிற்கல்’ என ஆசிரியர் வகைப்படுத்துரைத் தலால் இந்நிலை ஆறினையும் கல்லாம்நிலையிலும் கடவுளாம்நிலையிலும் இரு வகைப் ப. இயைத்து நச்சினார்க்கினியர் காட்டும் உதாரனப்பாடல்கள் இருவகைப்பட்ட கற்கோள்நிலை ஆறினையும் நன்கு புலப்படுத்துவனவாகும்.

(பாடம்) ; கோட்டம்2 2 உணர்க? 3 மூவேந்: