பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்கங்கள் - 129

மன் : மிக்க மகிழ்ச்சி. நீயே நெய்தல் நாட்டு வீரன், படைத்தல்ைவரே ! எல்லா வகைச் சிறப்புக்களுட னும் வில்லப்பர் நம் விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்க. அமைச்சரே ! நம் நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறது ? . அம்ை : பரிசு பெற இருக்கும் வீரனை வீரர்களே தூக்கிச் -

செல்ல வேண்டும். அவரை நடக்கவிடக் கூடாது என்கிறது நாட்டுச் சட்டம். மன் கூசப்பரே! தக்க ஏற்பாடு செய்க. ப. த. நன்று மன்னவா. -

(உள்ளே போய் நான்கு வீரர்களை அழைத்து வருகிருர்) . . மன் வீரர்காள்! - - அமை: இவரை..... ... • - (உடன் படைத் தலைவரும் நாட்டு வீரர் களும் வில்லப்பனை கட்டிப் பிடித்துக் கொள் கிரு.ர்கள்.) - வில் : மன்னர் பெருந்தகையே இங்கு நடப்ப வற்றைக் கண்டு நான் ஐயப்படுகிறேன். அரசர் அறிவிப்பை ஏற்று முடித்துத் தந்த என்னை நீங்கள் மதிக்கக்கூட வேண்டாம், உரிய பரிசைத் தந்தால் போதும். அரசாங்க ஆணையை மேற் கொண்டு முடிப்பதற்காக ஒரு உயிரையே கொன்றிருக் கிறேன். - - - அமை மன்னவரே !...

மன் : உம் ......... உயிரைக் கொன்றிருக்கிருயா ? அமைச்சரே கொலையைப் பற்றி நம் நாட்டுக் சட்டம் என்ன சொல்கிறது ? த. நா-9.