பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

யும், அதனுள் விட்டணியும் முழுக்கைச் சட்டையுமே உடுப்பேன். கருமை, பசுமை நிற உடைகளே எனக்கு விருப்பமானவை. கையில் அரையளவுத் துண்டைக் கொண்டிருப்பேன். ம.ணி ப் பொறி அணிவேன். ',

சனி இருப்த்தைந்து அகவை நிறைந்த நான் சோதி ட்க் கலைஞன். முழுக் குடுமியாக வளர்த்துக் கழுத்து வரை வெட்டி விட்டுக் கொண்டவன். நெற்றி, நிறையத் திருநீறணிந்து பெரிதாய்க் குங்குமப் *பொட்டிட்டு, அதன் கீழ் சந்தனப் பிறை இட்டுக் கொள்வேள். காதில் சிவப்புக் கல் கடுக்கன் அணி வேன். முறுக்கிவிடும் முழு மீசை எனக்கு விருப்ப மானது. பெரிய வெள்ளித் தாயத்தைக் கருப்புப் :பட்டுக் கயிற்றில் சேர்த்து மார்பில் படுமாறு கழுத் தில் அணிவேன். தோளிலில் ஒரு தாயத்தைச் சிவப்புப் பட்டுக் கயிற்றில் சேர்த்துக் கட்டிக் கொள் வேன்.வெண்பட்டை முழங்கால் வரை மூலக் கச்ச மாகக் கட்டிக் கொள்வேன். அதன் மேல் இடுப்பில் பச்சை நிறப் பட்டு ஒன்றைக் குறுக்காக டித்துக் கட்டுவேன். மார்பிலும், கைகளிலும் மேல் கீழாகச் சந்தனத்தைப் பட்டையாப் பூசிக் கொள்வேன். மேலே எதையும் உடுத்தாமல் திறந்த மார்புடன் விளங்குவேன். எப்பொழுதும் நான் எடுத்துச் செல்லும் எனது உரிமைப் பொருள்கள் பின் வரு வன : ஒரு இரும்புப் பெட்டி, படுக்கைச் சுருள், அரிக்கன் விளக்கு, ஒரு பை, விசிறி, ஒரு குடை, நெடுநாளாய் வளர்க்கும்:ஆந்தை.