பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - 45.

வியா : என்னடா மாப்பிள்ளை, நீயும் இப்படிச் சொல்லி விட்டால் ...... வேறு ஏதும் வழியில்லையா பார்.

சனி நான் என்ன மாமா செய்வேன்? அவன் எழு தின எழுத்து அது. மாற்ற முடியுமா என்ன? வியா : மாப்பிள்ளை நான் மிகவும் ஆர்வமோடு இருந்: தேனடா. உனக்கு என் மகளைக் கட்டிப் பார்க்க வேண்டும் என்று இருந்தேனே. பெண்ணும் தாயும் கூட அதை விரும்பாமல் என் ஆசையில் பாதி மண்ணைப் போட்டார்கள். இப்போது நீ மீதி மண் ணையும் போட்டு விடுவாய் போலிருக்கிறதே ! சனி : நரன் என்ன மாமா செய்வேன் ? தெரிந்திருந்: தும் பாழுங் கிணற்றிலே விழச் சம்மதிக்கவா நான். வியா (சிந்தித்து) ஏன்டா மாப்பிள்ளை ! நீ தான் சோதிடத்தையே அடக்கி ஆள்பவளுயிற்றே; இந்த மேடம், கன்னி, துலாம் இதெல்லாம் நீ சொன்ன படி ஆடுமே ; நீயே இந்தச் செவ்வாய்க் களங்க முள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொண் டால் உன்னை அந்தக் களங்கம் என்ன செய்ய முடி யும் ? என்ன நான் சொல்வது ? சனி (தனக்குள். ஏது, மாமா சுற்றி வளைக்ருகிரே) மாமா ! உங்களுக்குத் தெரியாது மாமா. நம்புகிற வனுக்குத்தான் கடவுள், சாத்திரம், சோதிடம் எல் லாம். அதோடு பக்தனைத்தான் பரமன் சோதிப் பார். ஏன் மாமா எஞ்சினே தண்டவாளத்தை விட்டு நகர்ந்தால் வண்டியெல்லாம் என்ன மாமா செய்யும் ? அது போல தாங்களே சாதகத்தை மதிக்காமல் நடந்தால் அது சாபக் கேடாகவல்லவா முடியும் ? சோதிடப் பிசாசு என்னைச் சுற்றிக் கொள்ளும் மாமா, ஏன் மாமா ! யாரோ உங்கள்