பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150



உடனே ஸபிய்யா, கூடாரத்தின் கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு கோட்டையை விட்டு வெளியே வந்து, அந்த யூதருடைய தலையை நோக்கி ஓங்கி அடித்தார்கள். அந்த அடியினால் மண்டை உடைந்து கீழே விழுந்தார் அந்த யூதர்.

அதன்பின், ஸபிய்யா கோட்டைக்குள் சென்று மாண்ட யூதருடைய ஆயுதங்களை எடுத்து வருமாறு ஹஸ்ஸானிடம் கூறினார்கள். அவரோ 'தமக்கு ஆயுதம் அவசியம் இல்லை' என்று கூறி விட்டார். -

பின்னர் எதிரிகளுக்கு அச்சம் உண்டாவதற்காக, அந்த யூதருடைய தலையை வெட்டி, கோட்டைக்கு வெளியே எறிந்து விடும்படி ஸபிய்யா சொன்னார்கள்.

அதுவும் ஹஸ்ஸானால் இயலாது போயிற்று. பிறகு ஸபிய்யாவே அந்த வேலையையும் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டார்கள் யூதர்கள்: கோட்டைக்குள்ளும் படைகள் இருப்புதர்க எண்ணி, அதைக் தாக்காமல் விட்டு விட்டார்கள்.


112. “எனக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள்?”

முற்றுகை தொடங்கிப் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், குறைஷிகள் எந்தப் பயனையும் காணவில்லை. அதனால் குறைஷி, யூதர்களிடையே மனத்தளர்ச்சி உண்டாகியது. அவர்களுக்கு வர வர நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.

தவிர, இருபத்து நான்காயிரம் வீரர்களுக்கு உணவு தயாரித்து அளிப்பது மிகவும் சிரமமாகவும் இருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்தில் கால நிலையால் பலமான புயல் கிளம்பியது. அதனால் எதிரிகளின் கூடாரங்கள் சிதைந்து போயின. அடுப்பின் மீதிருந்த சமையல் பாத்திரங்கள் எல்லாம் உருண்டு, புரண்டு கீழே விழுந்தன. இதனாலும் எதிரிகள் தைரியத்தை இழந்தனர்.