பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230



பெண்கள் பலர், தங்கள் நகைகளை எல்லாம் கொண்டு வந்து, பெருமானார் அவர்களிடம் சமர்ப்பித்தனர்.

பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தவர்கள் எல்லோரும், இஸ்லாத்தின் அவசியத்திற்காக, அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி பெருமானார் அவர்களை வேண்டிக் கொண்டனர்.

இறுதியாக, முப்பதினாயிரம் சேனையும், சேனைக்கு வேண்டிய பொருட்களும் சேர்ந்தன.

படையில் சேர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் என்று தோழர்கள் எல்லோருக்கும் ஆவல் மிகுதியாக இருந்தது. ஆனால், அவர்களில் சிலருக்கு, பயணத்துக்கான வசதி இல்லாததால் அவர்கள் சேர இயலவில்லை.

பெருமானார் அவர்களுடன் சேர்ந்து போர் முனைக்குச் செல்லும் பாக்கியம் பெற முடியவில்லையே என்று எண்ணி மிகவும் வருந்தினார்கள். பெருமானார் அவர்கள், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.


178.சுகவாசி ஒருவர் படையில் சேர்ந்தார்!

ஹிஜ்ரி 9-வது வருடம், முப்பதாயிரம் வீரர்களுடன் பெருமானார் அவர்கள் ஷாம் தேசத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள்.

அப்பொழுது அபூ கைதமா என்ற தோழரின் மனைவியர் இருவர் தம் கணவருக்காக வீட்டில் தண்ணீர் தெளித்து, குளிர்ச்சியாக, நல்ல உணவும் தயாரித்து வைத்திருந்தனர். இதைக் கண்ட அபூ கைதமா “பெருமானார் அவர்கள் வெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கையில், நான் மட்டும் இங்கே இந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதா?” என்று சொல்லிக் கொண்டே ஒடிப் போய், தம்முடைய ஒட்டகத்தின் மீது ஏறி, பெருமானார் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

பெருமானார் அவர்கள் மதீனாவை விட்டுப் புறப்படும் பொழுது, மதீனாவிலுள்ள காரியங்களை நிர்வகிக்கத் தகுதியான ஒருவரை