பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237



அவ்வாறு அனுப்பப்படுபவர்களைப் பெருமானார் அவர்கள் சோதித்துத் தேர்வு செய்த பிறகே அனுப்புவார்கள்.

திருக்குர்ஆனை நன்கு மனப்பாடம் செய்தவர்களையே பிரச்சாரகர் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும்படி செய்வார்கள்.

பெருமானார் அவர்கள் ஒரு சமயம் பிரச்சாரர்களை அனுப்ப எண்ணிய போது, அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துத் திருக்குர்ஆனை ஓதும்படிச் சொல்லிக் கேட்டார்கள்.

அவர்களில் இளைஞர் ஒருவர் இருந்தார். அவர் அருகில் பெருமானார் சென்று, “உமக்கு எவை நினைவில் இருக்கின்றன?” என்று கேட்டார்கள்.

அவர் “எனக்கு ஸுரத்துல் பகராவும் மற்றும் இன்னின்ன ஸுராக்களும் மனப்பாடம் உண்டு” என்றார்

உடனே பெருமானார் அவர்கள், “அப்படியானால், இவர்கள் எல்லோருக்கும் நீரே தலைமை வகியும்” என்றார்கள்.

முஸ்லிம் பிரச்சாரகர்கள் அனைவரும் இஸ்லாம் மத சம்பந்தமான நெறிமுறைகளை நன்கு அறிந்தவர்கள். பெருமானாரோடு அவர்கள் இரவும், பகலும் இருந்து இஸ்லாமிய நீதி முறைகளை நன்கு தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும், செயலும், பெருமானார் அவர்களைப் பின்பற்றியதாகவே இருக்கும்.

ஏமன் மாகாணத்தில் இஸ்லாத்தைப் பற்றிய போதனை செய்ய முஆதுப்னு ஜபல், அபூ மூஸல் அஷ்அரீ ஆகிய இருவரையும் பெருமானார் அனுப்பி வைத்தார்கள்.

அவர்களை அனுப்பு முன் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய முறைகளைப் பெருமானார் அவர்கள் போதித்தார்கள்.

பெருமானார் அவர்கள், அவர்களுக்குச் செய்த போதனையானது, இஸ்லாமியப் பிரச்சாரத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.

பெருமானார் அவர்கள் கூறியவை: