பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - பார்வதிபாய் அதவலே ஒரு கூட்டத்தில் நம் அம்மையார், கார்வே பெரியார் பொருளுக்காகத் துன்புற்று அலைந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போது ஒர் அமெரிக்கப் பெண்மணியார், உங்கள் பெரியார் ஏன் ஒரு மோட்டார்வண்டி வைத்துக்கொள்ளுதல் கூடாது?’ என்று எழுதிக் கேட்டார். உடனே அம்மையார் அதற்குப் போதிய பொருளின்மையைத் தெரிவித்தார். அந்த அமெரிக்கப் பெண்மணிகள் அதை கினேவில் வைத்திருந்து அம்மையார் ஊருக்கு வந்த பின்னர் ஒரு மோட்டார் வண்டியை வாங்கிக் கைம்பெண் இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர். அந்த வண்டி இப்போதும் கைம்பெண் இல்லத்துக்குப் பயன்படடு வருகிறது. கார்வே பெரியார் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கவே, பார்வதிஅம்மையார் இந்தியாவுக்குத் திரும்பஎண்ணிளுர். அப்போது அவருக்கு அறிமுகமாயிருந்த அந்தப் பெண்மணிகளும் பிற இந்தியப் பெரியோர்களும் அம்மையாரை மிக்க அன்போடு வழி அனுப்பினர். # 1930-ஆம் ஆண்டில் போர் முழக்கம் அடங்கி விட டமையால், நம் அம்மையார் இங்கிலாந்தையும் பார்க்க விழைந்தார். அங்கே புகைகரத்துக் கைம்பெண் இல்லத்துப் பெண்மணியார் மேல்காட்டுக்கல்விக்காக வதிந்திருந்தார். அப் பெண்மணியார் பார்வதியாருக்குப் பெரிதும் துணையாக இருந்து பல இடங்களையும் காட்டினர். பார்வதிஅம்மையார் அங்கே இருந்த இந்தியரிடையே சொற்பொழி வாற்றி 30 பவுன் கைம்பெண் இல்லத்துக்குப் பெற்ருர். -