பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பிஞ்சு, பரட்டைக் கீரை, சிறு கீரை, சிறு பயறு, பொன் ளுங்கண்ணி, கதலி வாழைப் பழம், கட்டின உப்பு, புளியாரை, நெல்லிக்காய், அரிநெல்லிக்காய், கொதி நீர், வெள்ளாடு, மான், காடை, சுருமீன், குரவை, வரால், கெளிறு, அயரை, தேன், சர்க்கரை, பசும்பால்-இவை வியாதிகளை விலக்கும்.

மருந்திற்கு முறிவான வகைகள்

பாகற்காய், பயற்றங்காய், பூசனிக்காய், சுரைக்காய், காட்டுப் பாகற்காய், மாங்காய், தேங்காய், சேம்பு, கடலை, பெரும் பயறு, கொள்ளு, காடி, கோழி, கொக்கு, செவ் வாடு, கடுகு, எருமைப்ட்ால், நெய், போதை தரும் கள், சாராயம் போன்ற குடிவகைகள், உளுவை, சுரை, விலாங்கு, கயல் மீன், கூளி கெண்டைகள் முதலியவைகள் தின்றால் மருந்து முறிவு ஏற்படும். வியாதியையும் பெருக்கும்.

வியாதியும் உணவும்

நெய்: குளிர் சுரம், சன்னி, ஜலதோஷம், பேதி, வாதம், வாத குன்னம் உள்ளவர்கள் இதை உபயோகிக்கக் கூடாது.

தயிர்: பேதி, விஷசுரம், ஜலதோசம், கிரந்தி, பாண்டு, பீனசம், பீலிகம், வாத குன்மம், கேத்திர நோய், விக்கம், குரை நோய் உள்ளவர்கள் இதை நீக்கவேண்டும்.

வெற்றிலை: மூர்ச்சை, சன்னி, மகோதரம், விஷம், பைத்தியம், க்ஷயம், தாபசுரம் உள்ளவர்கள் இதை நீக்க வேண்டும்.