பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பயற்றம் பிஞ்சு, பீர்க்கம் பிஞ்சு, வாழைத்தண்டு, வாழைப் பூ, பூசனிக்காய், முள்ளங்கி, வெங்காயம், வள்ளிக்கிழங்கு முதலியவைகளைச் சேர்க்கலாம்.

கீரை வகைகளில் முளைக்கீரை, மணத்தக்காளி, பொன்னுங்கண்ணி, வல்லாரை, அப்புக் கோவை, புளியாரை, பொன்னவரை, முசுமுசுக்கை, முருங்கைக் கீரை கொள்ளலாம்.

ரச வகைகளில் வெந்தயம், கொத்தமல்லி, சுக்கு, அசத்தி, குரிஞ்சான், பாகல், தும்பை, ஓமம், சதகுப்பை, செங்கடுகு, கொத்தமல்லியும், வற்றல்களில் சுண்டைக் காய், மணத்தக்காளி, தூதணம், பேய்ப்புடல், அவரை, கண்டங்கத்திரி, நெல்லி வகைகளும், ஊறுகாய்களில் மிதிபாகல் பிஞ்சு, சுண்டை, மஞ்சள் மிளகு, மாம்பிஞ்சும் கொள்ளலாம்.

ஆகாரத்திற் பிரிக்த அன்னரசமானது மூன்ரும் நாள் உதிரமாகி எட்டாவது நாள் சுக்கிலமாகும். அதை விரய மாக்காது மாதந்தோறும் இரண்டு தடவை உடல் உறவு கொள்ளவேண்டும். இவ்விதமாகக் கருத்தரித்தால் தேக திடமும், ஆயுள் நீடிப்பும், பிணி இல்லாமலும் இருக்கலாம். விந்து அதிகமாய்ச் செலவழித்தால் பிணி மூப்புச் சாக்காடு எளிதல் அடையக்கூடும்.

இருதய வலுவுக்கு

நார்த்தம் பழம், தாமரைப் பூ, தாழம் பூ, சீமை அத்திப் பழம், மாதுளை, கெல்லிக்காய், புளி, கற்பூரம், கொத்த மல்லி, கடுக்காய், இலவங்கப்பட்டை, அம்பர், ஏலக்காய், கஸ்தூரி, பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ-இவைகளில் சில: