பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

செரியா மாந்தம் கண மாந்தம் சுழி மாந்தம் சன்னி மாந்தம் முக்கு மாந்தம் ஊது மாந்தம் விக்க மாந்தம் பால் மாந்தம்

வாத மாந்தத்தின் குணம்

குழந்தைகளின் உடல் வெதும்பும். வியர்க்கும். மயங்கும். சீதமாய்க் கழியும். நீர் போன்றும் கழியும். கை கால் குளிரும். கண் குழியும். கா உலரும். குரல் கம்மும். பால் குடிக்காது. நாசி புண்ணுகும். கொட்டாவி விடும். . தேங்காய், எருமைப் பால், வாழைப் பழம், வெல்லம், துவரை, கடலை, உழுந்து, மொச்சை, பாகல், சுரை, உளுவை, கெண்டை மீன் போன்ற வாயுப் பதார்த்தங் களை மிகுதியாக உண்ணக்கூடாது.

பித்த மாந்தக் குணம் . வாந்தி பேதியாகும், உடம்பு வியர்க்கும், குரல் எழும் பாது, மூர்ச்சை காணும், வலிப்பு வரும், குளிரும்.

சிலேட்டும மாந்தக் குணம் குழந்தை மயங்கும், வயிறு பொருமும், கழியும், கா வெளுக்கும், நெஞ்சிற் கபங்கட்டும், உடம்பு சிலிர்க்கும்.

மருத்துவ முறைகள் r 1. வெற்றிலைக் காம்பு, வசம்பு, பூண்டு, திப்பிலி சமகிறையாக எடுத்து வெதுப்பி வெந்நீரில் அரைத்துக் கொடுக்கவும்.