பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நல்ல பிள்ளையார்

மரவட்டையின் தலே மத்தாப்புக் குச்சியின் துணி, போலச்சிவப்பாக இருந்தது. எத்தனை கால்கள்! அது நகரும்போது மிகவும் குட்டையான ரெயில் மெல்லப் போவது போல இருந்தது

நத்தை, 'ஆமையண்ணு, அந்தப் பிராணியைப் பார் எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்றது. 'அதன் மேலே ஒரு பாரமும் இல்லையே” என்று ஆமை சொல்லி ஆச்சரியம் அடைந்தது.

"அதற்குக் கால்கள் எத்தனே பார் அண்ணு 1. அடேயப்பா ! இத்தனை கால்களைக் கொண்டு அது வேகமாக ஓட முடியும் என்று நினைக்கிறேன்' என்று நத்தை வியப்புடன் சொல்லியது. -

அந்த இரண்டும் அந்த மரவட்டைக்கு அருகில் போயின. "ஐயா, உங்கள் பேர் என்ன ? பார்க்க மிகவும் அழகாக இருக்கிறீர்களே!’ என்று ஆமை கேட்டது.

STಿನ பேர் மரவட்டை இதென்ன. உங்கள் இரண்டு பேர் முதுகிலும் இவ்வளவு பெரிய சுமை?' என்று கேட்டது.

அதை ஏன் சொல்கிறீர்கள் ? பிறக்கிறபோதே இந்தச் சுமையோடுதான் பிறந்தோம். நீங்கள் பாக்கியசாலி, ! உங்களுக்கு ஒரு சுமையும் இல்லே, உங்களுக்குக் கால்கள் நிறைய இருக்கின்றனவே!