பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. நல்ல பிள்ளையார்

தின்ன வேண்டும் என்ற ஆசை தோன்றலாம். ஆகையால் மரம் இல்லாமல் இருந்த ஓர் இடத்துக்குப் போய் உட்கார்ந்து கொண்டது காலையில் சூரியன் தோன்றி இரண்டு மணி நேரம் ஆயிற்று. குரங்குக்குப் பசி எடுத்தது. சே ! இந்தப் பசியை நாம் லட்சியம் பண்ணக்கூடாது. ஒவ்வொரு நாளும் நாம் காயை யும் கனியையும் தின்று தின்று எதைக் கண்டோம் ? இன்று எப்படியாவது இந்தப் பசியைப் பொறுத்துக் கொண்டு, விரதம் இருந்து வெற்றி பெறவேண்டும்' என்று அது தீர்மானமாக இருந்தது. -

'இன்று முழுவதும் பட்டி னி கிடந்தால் நாளைக்குத் தின்னப்போகும் கனியோ காயோ மிகவும் ருசியாக இருக்கும்’ என்ற எண்ணம் அதற்கு உண்டாயிற்று. சே ! அதைப் பற்றி இப்போது எண்ணுவானேன்? இன்றைக்கு விரதம் இருப்பதைப் பற்றியே எண்ணுவோம். விடாப்பிடியாக விரதம் இருந்தே தீருவோம்’ என்று மறு எண்ணம் எழுந்தது.

மறுபடியும் அது எண்ணமிட்டது. உபவாசம் என்பது உண்ணுமல் இருப்பதுதானே ? உணவைப் பற்றி எண்ணுமல் இருப்பது அல்லவே ? எப்படியும் நாளேக்கு எதையாவது தின்னப் போகிருேம். அதைப்பற்றி இப்போது நினைத்தால் என்ன ? அதல்ை விரதம் கெட்டுப் போகுமா ? அந்த மனிதர்கள் விரதத்தைப் பற்றிச் சொன்னபோது பாரணை பற்றியும் சொன்னர்களே!’ என்று நினைத்தது.