பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நல்ல பிள்ளையார்

'அட! இந்த வயிறு என்ன இப்படிப் பசிக்கிறது? ஏ வயிறே ! நீ சும்மா இரு ! நாளேக்கு உனக்கு இரண்டு பங்கு உணவு தருகிறேன்" என்று சொல்லிக் கொண்டது குரங்கு.

அது மறுநாள் பழம் தின்னுவதையே எண்ணிக் கொண்டிருந்தது. ஆமாம்; நாளேக்கு எப்படியும் பழம் உள்ள கிளைக்குத்தானே போய்ப் பழத்தைப் பறிக்க வேண்டும் ? இப்போதே அந்தக் கிளேயில் போய் உட்கார்ந்து கொண்டால் என்ன ? பழம் கண்ணில் படக்கூடாது என்று நாம் விரதம் இருக்க வில்லையே! இப்படி எண்ணி அது பழங்கள் நிறைய இருந்த கிளேக்குச் சென்று அமர்ந்தது. சிறிது தூங்கிப் பசியை மறக்கலாம் என்று கண்ணே மூடினுல் தூக்கமே வரவில்லை. பசி அதிகமாகியது.

பழத்துக்குப் பக்கத்தில் போய் உட்காரலாம். அதல்ை விரதம் கெட்டுவிடாது என்று அந்தக் கிளேயில் தொங்கிய பெரிய பழத்துக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. அதன் மணம் மூக்கைத் துளைத்தது. அடுத்தபடி, இதைத் தொட்டுக் கொண்டிருக்கலாமே! தொடக் கூடாது என்பது நம் விரதம் அல்லவே! என்ற எண்ணத் தால் அந்தப் பழத்தைக் கையால் தொட்டுக் கொண்டே இருந்தது. இப்போதே இதைப் பறித்துத் தின்ன வேண்டும் என்ற ஆவல் எழுந் தாலும் குரங்கு அதை அடக்கிக்கொண்டு பொறுமை