பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளைப் பூனை 43.

"அவர் கோபம் மாறிற்ரு ?' என்று கேட்டான் வீரசிம்மன்.

"அவர் சிறிது கோபம் ஆறினர்; இவளே மறுபடியும் பெண்ணுக மாற்றுகிறேன். ஆளுல் இவள் மேலே போனல் பூனேயாக மாறிவிடுவாள். இங்கே உங்களுடன் இருக்கும்போது பெண்ணுகவே, இருப்பாள் என்ருர்.'

"அப்புறம் என்ன செய்தீர்கள்?

"நாங்கள் மறுபடியும் அவரை வணங்கி, முனிவர் பெருமானே, இப்படி இருந்தால் இவளே யார் கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள் ? இவள் வாழ்வு வீணுகி விடுமே!’ என்று புலம்பி அழுதோம்.'

"பிறகு ?

"அவர் மனம் இரங்கி, இவளேப் பிரியமாக எடுத்துச் சென்று ஓர் அரச குமாரன் வளர்ப்பான். நான் ஒரு மந்திரக் கோலேத் தருகிறேன். அவனிடம் அந்தக் கோலேக் கொடுங்கள். அவன் தன் அரண்மனைக்குப் பூனேயாக உள்ள இவளே அழைத்துப் போய் இந்தக் கோலால் அடித்தால் இவள் பெண்ணுக மாறிவிடுவாள்' என்று சொன்னர்” என்று அந்த அரசன் சொன்னன்.

அவன் சொல்வதைத் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தான் வீரசிம்மன். ... " -