பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நல்ல பிள்ளையார்

வாயைக் கிழித்துவிட்டது. எனக்கு ஒர் உபகாரம் செய்கிருயா ? " என்று பாம்பு கேட்டது,

என்ன செய்ய வேண்டும், சொல்; உடனே செய்கிறேன்' என்றது நரி.

இந்தக் கொம்பை என் வாயிலிருந்து பிடுங்கி விடவேண்டும்" என்று கெஞ்சியது பாம்பு,

"இதோ, பிடுங்கி விடுகிறேன்" என்று சொல்லவே, பாம்பு ஒரு மரத்தின் அடிக்கு ஊர்ந்து சென்று அதைச் சுற்றிக் கொண்டது. தனி இழுப் பதற்குச் செளகரியமாக இருக்கும் என்று அப்படிச் செய்தது. சுற்றிக் கொண்ட பிறகு வாயை ஆ என்று திறந்து காட்டியது. நரி தன் பலம் கொண்ட மட்டும் அந்தக் கொம்பைக் கடித்து இழுத்து வெளியிலே போட்டுவிட்டது. - -

தம்பி, நீ செய்த இந்த உபகாரத்தை என்றைக்கும் மறக்க மாட்டேன். என்னலே உனக்கு ஏதாவது உபகாரம் வேனுமானல் சொல், செய்கிறேன்” என்றது. பாம்பு. .

"அண்ணே, எனக்கு நண்டு என்றல் மிகவும் பிரியம். இந்தக் குளத்தங்கரையில் வரும் நண்டு களே நீயும் சாப்பிடுகிருய் உனக்கு இந்த நண்டு ஓர் உணவா? இனிமேல் நண்டுகளையெல்லாம் எனக்கே விட்டுவிடு' என்று நரி சொல்லியது,