பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரப் பெட்டி 67

ஒரு பட்டுச் சட்டை வேண்டும்” என்று அப்பா தட்டினர். அ ப் படி யே வந்தது. "இங்கே பாருங்கள்; எனக்கு ஒரு காசு மாலை வேண்டும். சாமியார் வருவதற்குள் வருவித்துத் தாருங்கள்' என்று அம்மா அவசரப்பட்டாள். அவளுடைய நச்சரிப்பைக் கண்டு அப்பாவுக்குக் கோபம் வந்தது. "இருடி, பேராசைக்காரி ! உனக்குப் புடவை, தங்கச் சங்கிலி எல்லாம் கிடைத்தது போதாதா ? நீ சனியன் மாதிரி குறுக்கே வராதே !' என்று கோபத்தோடு சொன்ன அப்பா, எதையோ கேட்க எண்ணினவர், 'சூ சுவாகா , சனியன்’ என்று தட்டிவிட்டார். அவர் கோபம் குறையாமல் அப்படி உளறி விட்டார். -

அவ்வளவு தான்; பெட்டிதிறந்தது, அதிலிருந்து கன்னங் கறேல் என்று ஒரு வடிவம் வெளிப்பட்டது. லபக் கென்று அப்பாவை விழுங்கி மறைந்தது. பெட்டி மறுபடியும் மூடிக் கொண்டது. அப்பா போய் விட்டதைக் கண்டு அம்மா அலறிப் புடைத்துக் கொண்டு கதறினுள் கந்தனுக்கு, "அதிக ஆசைப்படாதே' என்று சாமியார் உபதேசித்தது நினைவுக்கு வந்தது. * . . . . . . . . . .

அந்தச் சமயத்தில் சாமியார் வெளியே போனவர் சிரித்தபடியே வந்தார். சாமி, என் புருஷர் போய் விட்டாரே." என்று அம்மா அழுதாள். என் தெய்வமே எங்களை ம ன் னி த் து எங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கந்தன் அவர் காலில் விழுந்து புலம்பின்ை.