பக்கம்:நாகப்பட்டினம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 93

கட்டியிருக்கலாம். இத்துறைமுகத்தையே கைக்கொண்டிருக்கலாம். அஃதாவது வணிகத்திற்குச் சாளுவ நாயக்கன் பட்டினத்தைக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். இது நாகை ஒதுக்கலுக்கு ஆட்பட்டதன் அடையாளம். ஆனால் மேலே கண்ட பாராமுகம், ஒதுக்கல் இரண்டையும் மீறி நாகை அன்னோர் காலத்திலும் பின்னரும் அயல்நாட்டு வணிகத் துறைமுகமாகச் சிறப்புடன் விளங்கியது. இது நாகை தன்னைத்தானே நிலைநாட்டிக் கொண்டதன் வெற்றி அடையாளம். வருவாய் உண்டியல்

இதற்கு மேலும் அழுத்தமாகத் தெரிவது நாகை மராத்திய மன்னருக்கு வருவாய் உண்டியலாகப் பயன்பட்டதாகும். இது வெளிநாட்டார் ஆட்சித் தொடர்பில் காண வேண்டியதாகிறது.

தமிழ் மண் மன்னர் ஆட்சியுடன் அயல்மண் மன்னர் ஆட்சிக் கூட்டையும், தொடர்புகளையும் ஒரு மீள்பார்வையிடுவீர்களாயின் ஒரு கீழறுப்புச் செயல் புலப்படும். அஃது இந்நாட்டை ஐரோப்பி யருக்கு அடிமையாக்கிய பொறுத்தாற்ற முடியாத கொடுமை.

அசோகப் பெருமன்னன் இந்தியப் பெருமண்ணின் பெரும் பகுதியைக் கைக்கொண்டான். அவன் ஆட்சிப் படத்தில் தமிழ்நாடு தன்னாட்சியிலிருந்ததைக் காண்கிறோம். அப்பெருமன்னன் புத்த அறக்கொடையாளனாகவே இம்மண்ணை மிதிக்க முடிந்தது. நாகைக்கும் அவ்வாறே வரும் வாய்ப்பு நேர்ந்திருக்கலாம் என்று கண்டோம். பிற்காலச் சோழர் காலத்திலும் ஐரோப்பியர் பயணிகளாகவும், தூதுவர்களாகவும், பார்வையாளர்களாகவும் வந்து சென்றனர்.

கி.மு. 302 - இற்கு முன் வந்த சிரியாநாட்டு மெகசுதனிசு முதல், எகிப்துத் தாலமி, சீனநாட்டுப் பாகியான், யுவான்சுவாங், இத்- சிங் முதலிய பலரும் கடற்கரையோரமாகவும் உள்பகுதிகள் சில இடங்களாகவும் தாம் கண்டவற்றை எழுதி நம் வரலாற்றிற்கு உதவியுள்ளனர். நாகையைப் பற்றிப் பலரும் நல்ல குறிப்புகளைத் தந்துள்ளனர். - வாசுக்கோடகாமா

1498-இல் போர்ச்சுகீசியராகிய வாசுகோ-ட-காமா (Wasco Da Gama) புதுநிலங்காணும் பயணியாக மேலைக் கடற்கரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/111&oldid=584993" இலிருந்து மீள்விக்கப்பட்டது