பக்கம்:நாகப்பட்டினம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நாகபட்டினம்

ஆங்கிலேயர்க்கு நண்பர்

ஆலந்துக்காரருக்குப்பின் ஆங்கிலேயர் இடம்பெறத் துணைநின்றவரும் மராத்திய மன்னரே. அவருள் இரண்டாவது சரபோசி ஆங்கிலேயரை உயர்த்தினார் என்றுசொல்ல வேண்டும்.

முன்னே கண்ட சாளுவ நாயக்கன் பாளைய மனோராவில் சரபோசி பற்றிப் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது.

அஃது, "இங்கிலீசு துரைத்தனத்தின் சினேகிதரும், படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராசா சத்ரபதி சரபோசி மகாராசா" என்று காட்டுகிறது. -

ஆங்கிலேயருக்குச் சரபோசி மன்னர் நண்பராகமட்டுமன்றிப் படைத்துணைவராகவும் இருந்துள்ளார். தமிழ் மண்ணில் பிற இடங் களைக் கைப்பற்ற ஆங்கிலேயர் போர் செய்ய முனையும் போது அவருக்குப் படைகள் வழங்கித் துணையாகியுள்ளார். இதனால் ஆங்லேயர் ஆட்சி அமைய ஒரு வகையான அடித்தளத்திற்கு உதவி யுள்ளார். இந்த ஒருவகையான அடித்தளத்திற்கு மேல் முழுவகை யான நிலைத்த தளத்திற்கும் செயற்பட்டார். இச்சரபோசி மன்னர் 1798-இல் தம் மராத்திய ஆட்சியிலிருந்த நாட்டுப்பகுதி முழுவதையும் ஆங்கிலேயரே தம் பொறுப்பில் கொண்டு ஆள வழங்கிவிட்டுத் தஞ்சைக் கோட்டை எல்லைக்குள்ளேயே தம் ஆட்சியைச் சுருக்கிக் கொண்டார். ஆங்கிலேயர் ஆட்சி என்னும் சுருக்குக் கயிறு தமிழ்நாட்டு மக்கள் கழுத்தில் விழவும் வழிவகுத்தார். முடிவாக நோக்கினால் சோழமண்ணில் நாகையில் வெளி நாட்டவர் இடம்பெறக் காரணராக, கிருட்டிணதேவராயர் கால்கோள் செய்தார். மராத்தியர் கால்கோளை அடித்தள மனையாக்கினர். இதில் பெரும்பங்கைப் பங்களிப்பாகக்கொண்ட இரண்டாம் சரபோசி அடித்தள மனையில் அரண்மனை கட்டிக்கொடுத்த பணியைச் செய்தவரானார். நன்மை இல்லை

அயல்மண் மன்னர்களால் நாகைக்கு நேர்ந்த நன்மைகள் சில உள்ளன. நாயக்கர் காலத்தில் நாகைக் காரோணர் கோயிலில் ஆகமப்படி சில விரிவாக்கம் நேர்ந்தது. சிறுசிறு புதிய கோயில்கள் எழுந்தன. தொடர்ந்து மற்றவராலும் ஓரளவில் அறக்கட்டளைகள் நிறுவப்பட்டன. பழைய அறக்கொடைகள் பேணப்பட்டன; நழுவவும் விடப்பட்டன. நாணயம் அச்சடிக்கும் தொழில் நிகழ்த்தப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/116&oldid=584998" இலிருந்து மீள்விக்கப்பட்டது