பக்கம்:நாகப்பட்டினம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை i 17

ஆங்கிலர் காலத்தில்தான் துறைமுக அலுவலகம் (Port Office) திறக்கப்பெற்றது. கீழைநாடுகளுக்கு வணிகம் கருதியும் ஏற்றுமதி இறக்குமதிக்காகவும் பயணிகள் சென்று வரவும் துறைமுகம் வாய்ப்பான கப்பல்களைப் பெற்றது. சரக்கு ஏற்றுமதி இறக்குமதி களுக்கு தனிக் கப்பல்களும், பயணிகளுக்குத் தனிக் கப்பலுமாகக் கப்பல் போக்குவரத்து முறையாகத் தொடங்கப்பட்டது. இது கடல் வழிப் போக்குவரத்து.

வெளிநாட்டு இறக்குமதி ஏற்றுமதி, பயணிகள் பயணம் கருதிய உள்நாட்டுப் போக்குவரத்தான புகைவண்டித் தடத்தை நாகை பெற்றது. போக்குவரத்து வணிகப் பெருக்கத்திற்கு ஏற்பப் புகை வண்டி நிலையங்கள் அமைக்கப்பட்டன.

நகருக்கு நாகபட்டினம் புகைவண்டி நிலையம் ஏற்றுமதி இறக்குமதிக்கு அடுத்த 200 மீட்டர் அண்மையில் கடற்கரைட புகை வண்டி நிலையம்', அதையடுத்து 400 மீட்டரில் புறநகர் நிலையமாக வெளிப்பாளையம் புகைவண்டி நிலையம்', அதையடுத்து 3 கிலோ மீட்டரில் நாகூர்ப் புகை வண்டி நிலையம் என நாகை ஒன்றிற்கே நான்கு புகைவண்டி நிலையங்கள் அமைந்தன. கடற்கரையில் தெற்கு வடக்காக நோக்கினால் கடலில் கப்பல்களும் படகுகளும் காட்சியளிக்கும்; கடலின் ஒட்டிய கரையில் புகைவண்டி நகரும். அதையொட்டிய சாலையில் பேருந்துகள், சரக்குந்துகள், மகிழ்வுந்து கள், வண்டிகள் ஒடும். இவ்வாறு மூன்று வகைப் போக்குவரத்தையும் இன்று காணும் அளவிற்கு நாகை பெற்றது. அஞ்சல் நன்மை

செய்திப் போக்குவரத்திற்கு அஞ்சல் துறை ஏற்பட்டது. ஆளுகைக்கு ஆட்சித்துறை ஏற்பட்டது. உரிமை இயல் அறமன்றங் களும், குற்றவியல் அறமன்றங்களும் உண்டாக்கப்பட்டன. சட்ட ஒழுங்கை அறிவுறுத்தவும் காப்பாற்றவும் காவல்துறை உண்டாயிற்று. கல்வி நிலையங்கள், மருத்துவ நிலையங்கள். கலைக் கூடங்கள் தோன்றின.

இவையெல்லாம் உலகில் நேர்ந்துள்ள ஆட்சி முறையில் நடப்புகள்தாம் என்றாலும் இதற்கு முன்னர் முற்காலச் சோழர் ஆட்சியின்போது நேர்ந்த அமைப்புகள் அன்றிப் பிற ஆட்சியாளரால் எதையும் பெறாத நாகை ஆங்கில ஆட்சியால் இவற்றையெல்லாம் பெற்றுத் திகழ்ல தைச் சிறப்பாகவே குறித்தாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/135&oldid=585017" இலிருந்து மீள்விக்கப்பட்டது