பக்கம்:நாகப்பட்டினம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - - நாகபட்டினம்

வாய்ப்புகளும் நலன்களும் கிட்டின. இவ்வாட்சியில் அமைந்த நாகையும் இப்பயன்களைக் கொண்டது. -

அடுத்து பேராயக்கட்சி என்றும் காங்கிரசும் திராவிட இயக்கத்துக்குத் திராவிட முன்னேற்றக் கழகமும் அதனின்று பிரிந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தம்தம் கட்சி வெற்றியில் தமிழ்நாட்டு ஆட்சியை மேற்கொண்டன. இவ்வாறு நாகை அரசியல் கட்சி ஆட்சிகளால் ஆளப்பட்டது. ஆளப்படுகின்றது. - கல்வி தந்த காமராசர்

தமிழ்நாட்டு ஆளுகையில் அமைந்த காங்கிரசு அமைச்சர்களில் குறிப்பிடத்தக்கவர் பெருந்தலைவர் என்னும் சிறப்புப்பெற்ற திரு காமராசர் அவர்கள். அவர்தம் ஆட்சியில் கல்விக் கூடங்கள் பெருகின; சிறு தொழிற்கூடங்கள் பெருகின. ஏழை மாணவர்க்கு நண்பகல் உணவு வழங்கல் நடைமுறைக்கு வந்தது. தமிழ் நாடாக்கிய அண்ணா

அடுத்துக் குறிப்பிடத்தக்கவராக திராவிட முன்னேற்றக் கழக அறிஞர் பெருந்தகை அண்ணா (சி.என். அண்ணாத்துரை) பணி ஏற்றார். மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டாலும் மொழிப் பெயர் அன்றி சென்னை மாநிலம் என்ற பெயராக இருந்ததை மாற்றித் தமிழ்நாடு என்னும் உரிமைப் பெயரைச் சூட்டினார். பகுத்தறிவுக் கட்சியாக விளங்கிய அவர் ஆட்சியில் சீர்த்திருத்தத் திருமணங்கள் சட்ட இசைவு பெற்றன. இந்தி மொழி விலக்கலால் இரு மொழிக் கல்வித் திட்டம் உருவாயிற்று. தமிழ் ஆட்சி மொழியாயிற்று. நாகையும் இதனால் பயன் பெற்றது.

அடுத்துக் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி குறிப்பிடத்தக்க மக்கள் நலன்களை நல்கியது. இவற்றால் நாகை மக்களும் பயன் பெற்றனர். இவர் காலத்தில்தான் முதன் முதலில் நாகைக்கு அரசுக் குடியிருப்பு வீடுகள் எழுந்தன.

இப்போது செல்வி செயலலிதா ஆட்சியில் நாகை தனியொரு மாவட்டமாக நாகை காயிதேமில்லத் மாவட்டம் ஆயிற்று.

நாகை தன் நேர்முக ஆளுநராக மாவட்ட ஆட்சித் தலைவரைப் பெற்றது.

இவ்வாறு நிகழும் நம் ஆட்சியின் பயன்களைத் தொடர்ந்து வரும் பகுதியில் ஆங்காங்கு விரிவாகக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/138&oldid=585020" இலிருந்து மீள்விக்கப்பட்டது