பக்கம்:நாகப்பட்டினம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 127

மேலே குறிப்பிட்ட இரண்டு கோயில்களின் பெயர்களைக் கொண்டு அவ்வாற்றின் பெயர் சிந்தாறு' என்றாகிறது. நாணயக்காரத் தெருவில்

இதற்கு மேலும் துணைச் சான்றுகள் செவி வழி வழக்கும், நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் தம் அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழில் எழுதிய ஒரு கட்டுரையுமாகும். இரண்டின் படியும் நகரின் மேற்கெல்லையில் புகுந்து சிந்தாறு இக்காலத்தின் மேலவிதியைக் கடந்து, சட்டையப்பர் தெற்கு வீதிக்குள்ளாகப் பாய்ந்து, இக்கால நாணயக்காரத் தெருவில் ஓடி, வெங்காயக் கடைத் தெரு வழியாகப் பாய்ந்து, பின் வடக்கு நோக்கித் திரும்பி ஓடி, வெளிப்பாளையத்தில் ஒடி, அதன்பின் இக்காலத்தியப் பார்ப்பனச் சேரியின் கிழக்கே திரும்பிக் கடலில் கலந்தது. இவ்வாறு கொள் வதற்கு மேலும் சில தடயங்கள் உள்ளன. நாணயக்காரத் தெருவில் தெற்குப் புறத்தில் ஒரு மேட்டு நிலத்தில் புத்தர் சிலைகள் பலவும், சிலவகை நாணயங்களும், சில அரும் சிற்பங்களும் கண்டெடுக்கப் பட்டன. இவை சென்னை எழுமூர் காட்சிக்கூடத்தில் வைக்கட் பட்டுள்ளன.

இவை கண்டெடுக்கப்பட்ட இடம் ஒரு புத்தப்பள்ளியாகவோ, புத்தர்கள் கலைக்கூடமாகவோ இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வீரபத்திரசாமி கோயிலுக்குப் பின்புறத்தே இருந்த இடம் இஃதாகும். ஆற்றங்கரையில் புத்தப் பள்ளியமைத்து புத்தத்துறவிகள் வாழ்ந்துள்ளனர். மேலும் வெளிப்பாளையத்தின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் இப்போதுள்ள புகைவண்டித்தடத்தை ஒட்டி மேலைப் பகுதியில் இளஞ்சேரன் நகர் என்று புதிதாக உருவான புறநகர் ஒன்றுள்ளது. இந்நகரில் வீடுகள் கட்ட அடித்தளத்திற்கு அகழ்ந்த போது 30 அடி அகல அளவிற்கு இந்நகர் மனைகளின் மையமாகத் தெற்குவடக்கில் நீளமாக ஆற்று மணல்களே தோன்றின. (இது நான் கண்ட உண்மை). இதற்கு மேலும் பார்ப்பனச்சேரி ஒரு தடயமாகும். ஆற்றின் அக்கரை அகரம்

வெளிநிலத்திலிருந்து ஒரு நகர் நோக்கி வந்து புகும் பார்ப்பனர் அங்குள்ள ஆற்றின் அக்கரையில் தங்குவர். அது அவரது நாள் தொழுகைக்கும் மரபுக் கடன்களுக்கும் உகந்தது. இவ்வாறு நகரில் ஒடும் ஆற்றின் அக்கரையில் சேர்ந்து தங்கியதால் அவ்விடம் 'அக்கரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/145&oldid=585027" இலிருந்து மீள்விக்கப்பட்டது