பக்கம்:நாகப்பட்டினம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நாகபட்டினம்

பிற்பகுதியில் என்னைப் பார். ஏதோ என்காலம் இவ்வாறு நேர்ந்துவிட்டது. -

'ள்ன்ன உன் காலமா? பின் என்ன? அரசிளங்குமரி பீலிவளையின் உயிர்த்தோழி கையில் விளையாடிய நான் உன் காலால் உதைபட்டது காலமன்றி வேறென்ன?"

'ஏதேது: ஒரு பெருங்கதையே சொல்வாய் போலிருக்கிறதே! கதைவிட எனக்குத் தெரியாது: வரலாறு கூறுவேன் கேள்: வளையல் துண்டு தொடர்ந்தது: . ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்குமுன் அஃதாவது திருவள்ளுவப் பெருமான் தோன்றிப் பின் இரண்டாவது நூற்றாண்டுக் காலம். அஃதாவது தி.பி. இரண்டாவது நூற்றாண்டு",

"அஃதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குக் காலம்" - என்றேன் நான்.

அவ்வாறு சொன்னால்தானே உம் போன்றோர்க்குப் புரியும் - என்று முள்ளில்லாமல் சொல்லால் குத்திவிட்டு மேல் தொடர்ந்தது.

'இனிமையான இளவேனிற்பருவம், வைகாசித் திங்கள் முழுநிலவுக்கு முதல் நாள் மாலை. இதே கதிரவன்தான் அன்று செவ்வானத்தில் நின்றான். இந்தக் கரைக்கண் வந்து நின்ற மரக் கலத்தின் மேல் தட்டில் நின்ற எம் அரசிளங்குமரி பீலிவளையின் பொன்னுடல்மேல் தன் பொன் கதிர்களை வீசிக் கதிரவன் அழகு பெற்றுக்கொண்டிருந்தான். என்னைக் கையில் அணிந்திருந்த உயிர்த்தோழியின் கையைப் பிடித்தவாறு அரசிளங்குமரி இறங்கிக் கரையை அடைந்தாள். நானும் அன்றுதான் இங்கு வந்தேன். ஒரு பேரூர்

சுற்றுப்புறத்தில் மக்கள் நடமாட்டம் குறைவே. கடற்கரை மணல் மேடுகளில் சிறுசிறு குடில்களில் மீனவர் தென்பட்டனர். இப்பகுதி பெரிய நகரம் அன்று. சிற்றுாரும் அன்று. பேரூர் என்னலாம். கடலில் மீன் பிடிப்போர், கொண்டு சென்று விற்போர், ஒரளவில் பயிர்த்தொழில் செய்வோர், மிகச் சிலராகச் செல்வ வளம் படைத்தோர் கற்றோர் சிலர், அரிதாக அயலூரார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/20&oldid=584902" இலிருந்து மீள்விக்கப்பட்டது