பக்கம்:நாகப்பட்டினம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:30 நாகபட்டினம்

நாகைச்ைேமக் குடியானவர்

திருவாரூர் தியாகராசர் கோயில் கமலாலயம் அல்லியல் கோதையம்மன் கோயில் திருப்பணிக்கும், இவ்விரண்டு கோயில் களுக்கும் புதிதாகப் பார்ப்பனப் பயணிகளாக வருவோர்க்கு நாள்தோறும் உணவளிப்பதற்கும் ஓர் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இது மராட்டிய மன்னன் சகசி ஆண்ட 1695 இல் நிறுவப்பட்டது. மராட்டிய சகசி ஆட்சியில் வேளாண்மை செய்து கொள்ள நிலத்தைக் குடிஉரிமையாக 35 ஊரார் பெற்றிருந்தனர்.

அவர்களுள் வேளாண் குடியினர் 22 ஊரவர். அவர்களுள் "நாகபுட்டினச் சீமைக் குடியானவரும் பங்கு கொண்டனர்.

இவர்கள் அறக்கட்டளையின்படி ஒவ்வொரு அறுவடையிலும் 100 கலத்திற்கு 1 மரக்கால் நெல் வழங்க வேண்டும். நாகைப் பகுதி வேளாண் குடியானவர் விரும்பியோ அரசர் விருப்பப்படியோ இவ்வறத்தைச் செய்துள்ளனர். (27) -

இவ்வாறாக அறச்சான்றோர் அன்றித் தனித்தனிக் குழுவினராக நாகையில் வாழ்ந்தவருள் பாளையக்காரர் இருந்தனர். அவர்கள் வாழ்ந்ததுதான் வெளிப்பாளையம் என்று அறியப்பட்டது. நாயக்க மன்னர் காலத்திலும் நாயக்க இனத்தவர் அமைக்கப்பட்டிருந்ததை இப்போதும் வெளிப்பாளையத்திலுள்ள இராம நாயக்கன் பாளையம் சொல்லிக் கொண்டுள்ளது.

ஈ. சமய மக்களின் பொதுமை

அறம் செய்வதில் இந்து, இசுலாமியர் வேறுபாடியன்றிக் கூட்டாகச் செய்தனர். அதனிலும் மேலாக இந்துக்கள் இசுலாமியப் பள்ளிவாசலுக்கும் இசுலாமியர் இந்துக் கோயில்களுக்கும் செய்தனர்.

நாகூர் தர்காவிற்கு மராட்டிய மன்னர் பல அறங்கள் செய்தார். பெரிய மனோரா மராட்டிய மன்னன் பிராதாபசிங்கால் கட்டப் பட்டது. அறம் மட்டுமன்றி இசுலாமிய தர்காவை வணங்கினர். பெரிய மனோரா எழுப்ப நிலம் வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டில் துளசாமகன் "பிரதாபசிங் வணங்கி அளித்த நிலத்தில்" என்று அவன் செய்த வழிபாட்டு வணக்கம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த மனோராவின் மேல் இந்துக் கோயில் முறைப்படி கல்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/218&oldid=585099" இலிருந்து மீள்விக்கப்பட்டது