பக்கம்:நாகப்பட்டினம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 203

"வாய்த்த திருநாகை வாகான தேவடியாள் பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் - நேற்றுக் கழுதைகெட்ட வண்ணான்தான் கண்டுகொண்டே னென்றே

பழுதையெடுத் தோடிவந் தான்" (28)

ஒரு முத்து -

இத்தகைய முசுக்கட்டான்களிடையே ஒரு முத்தும் தோன்றியது. புலால் நாறும் சிப்பியில்தானே ஒளிவிடும் தூய முத்து தோன்று றெது. அதுபோல் தேவரடியார் குலத்தில் ஒரு முத்து தோன்றியது. அது காளிமுத்து அம்மையார். இவர் ஒரு கவித்திருமதியார். காத்தான் வருண குலாதித்தன்மேல் "வருண குலாதித்தன் உலாமடல் பாடினார். இன்பச் சுவைப்பேழையாகப் பாடிய புலமைச்சான்றோர் இவர்.

ஊ. உலகெங்கும் நாகையர்

நாகை மக்கள் நாகையிலும் தமிழகத்துப் பிற நகர்களிலும் இந்தியப் பரப்பிலும் ஓரளவில் பரவினர். அலுவலர், வணிகம், தொழில், பணி செய்தனர். வெளிநாடுகளுக்கும் சென்றனர். கீழை நாடுகளுக்கு அரசர்கள் காலத்தே ஓரளவில் வணிகத்திற்கும், புத்த சமய, சைவ சமயத் தொடர்பிலும் சென்றனர். நகரத்தார் என்னும் செட்டிமார்கள் கீழைநாடுகள் பலவற்றிலும் வட்டிக்கடைகளும், தொழிலகங்களும் நடத்தினர். இதனால் "தனவணிகர்" எனப் பட்டனர். இரங்கூன், சைகோனில் நாகைப் பெருமக்களும் வணிகம் செய்தனர். வருவாய் திரட்டி நாகைக்கும் வளம் திரட்டினர்.

இவற்றுடன் சிறுபணியாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் கங்காணிகளாகவும் இலங்கை, தாய்லாந்து, யாவா, சுமத்திரா, மலேயா, சிங்கப்பூர், பர்மா, மொரீசியசு, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளில் இடம் பெற்றனர். இருப்பினும் அங்கேயே தங்கியோர் மிகச் மிகச் சிலரே. ஏனையோர் ஈட்டிய பொருளுடன் நாகை வந்து நகரில் வளமாக வாழ்ந்தனர். இசுலாமியப் பெருமக்கள் குறிப்பாக இந்தோனிசியாவில் தம் மதத்தைப் பரப்பவும், நாட்டவும் நாகையி லிருந்தே சென்றனர். இன்று இந்தோனிசியா குறிப்பிடத்தக்க இசுலாம் நாடாகத் திகழ்வதற்கு நாகை வழிப்பயணிகளே வழிவகுத்தவராவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/221&oldid=585102" இலிருந்து மீள்விக்கப்பட்டது