பக்கம்:நாகப்பட்டினம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 2 it?

வடித்தனர். உலகின் சிலைகளில் புத்தர் சிலைகளே மிகமிக அதிக எண்ணிக்கை கொண்டவை; உருவ அளவிலும் பெரியவை. ஆப்கானித்தானத்தில் பாமியன் என்னும் இடத்தில் 100 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது. இது. கி.பி. 300 அளவில் உருவாக்கப்பட்டது. சீனாவில் பீகிங்கிற்கு வடகிழக்கில் உள்ள லாமா கோயிலின் 85 அடி உயரமுள்ள சிலை சந்தனமரத்தாலாகியது. இதுதான் மரத்தாலான புத்தர் சிலைகளுள் உயரமானது. உலகில் மிகப்பெரிய தங்கச்சிலை தாய்லாந்து நாட்டின் தலை நகராகிய பாங்காங்கில் உள்ள புத்தர் பொன்கோயிலில் உள்ளது. முழுமையும் தங்கத்தாலான இச்சிலை 10 அடி உயரமுடையது. இன்றைய மதிப்பு உருவாயளவில் 100 கோடி எனலாம்.

இந்தப் பெருமைகளுடன் ஒவ்வொரு புத்த வளாகத்திலும் நூற்றுக் கணக்கில் புத்தர் சிலைகள் இடம் பெற்றிருந்தன. முன்னர் போராபுதுார் கோயிலில் 504 சிலைகள் இருந்ததை அறிந்தோம். குறிப்பிடத்தக்க உயர அளவிலான சிலை நாகையில் இல்லை. ஆனால், எண்ணிக்கையில் அதிகம் இருந்தன. கலைத்திறம் உடையனவாக இருந்தன. முழுமையும் பொன்னாலான சிலை நாகானை விகாரையில் இருந்தது. -

நாகையில் (1928-இல்) வெளிப்பாளையத்திலும்(1934-இல்) நாணயக்காரத் தெருவிலும் சேர்ந்து 350 வெண்கலச் சிலைகள் கிடைத்துள்ளன.(4) இச்சிலைகளின் கலைவடிப்பு இந்தோனிசியக் கலைவடிப்பு என்பர். இப்பெரும் சிலை எண்ணிக்கை கொண்டு புத்த சமயம் சார்ந்த ஒவ்வொருவரும் புத்தத் துறவியரிடமிருந்து சமயப் பரிசாகப் புத்தர் சிலைகளைப் பெற்றுச்சென்று வணங்க வைத்துக்கொண்டனர் என்றறியலாம். மேலும் புத்த விகாரைக்குக் காணிக்கையாகப் புத்தர் சிலைகளை வழங்கினர் என்றும் கொள்ளலாம்.

நாகையில் கண்டெடுக்கப்பெற்ற சிலைகள் சென்னை எழுமூர் அருங்காட்சியகத்தில் உள்ளன. சிலையின் அமைப்பு: கீழே சதுரமான பீடம்; மேலே புத்தரின் அமர்ந்த தோற்றம், கைமேல் கை வைத்த பாதக்கால் மடிப்பு: தலையின் பின்புறம் கதிரவன் வடிவ வட்டம்: மேலே குடை. இது 11ஆம் நூற்றாண்டுக் காலத்தது. முன்னர் கண்டபடி ஒரு சிலையில் நெகமா என்று பொறிக்கப்பட்டுள்ளது.

சில சிலைகளின் அமைப்பு மகாயான புத்தச் சார்பில் தென்படுகின்றது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/237&oldid=585118" இலிருந்து மீள்விக்கப்பட்டது