பக்கம்:நாகப்பட்டினம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 乞乞分

பெற்றுள்ளது. இவ்வாயில் செங்கற்களால் மூடப்பட்டுள்ளது. (இதனில் நான் இறங்கிப் பார்த்துள்ளேன்). நாகையிலுள்ள நடுவர் கோயில் கருவறையில் ஒரு சிறு நிலவறை உள்ளது. இவ்வமைப்பு போர்க்காலங்களில் சிலைகளையும், அணிகளையும் மறைத்து வைக்கப் பயன்படுவதாகும். - - இதுபோன்றே சூளாமணி விகாரையிலும் நிலவறை அமைக்கப்

பட்டிருந்தது. இந்நிலவறை கொண்டு மரவேர் கெல்லப்பட்ட இவ்விடத்தில்தான் சூளாமணி விகாரை இருந்தது எனலாம்.

போர்த்துகீசியர் செய்த கொடுமையும், ஆலந்துக்காரர் காட்டிய கடுமையும் புத்தத் துறவியரை ஐயபட கார்த்து அவர்டால் சிக்காமலிருக்கப் புத்தச் சிலைகள் மறைத்து ைஆக்கப்பட்டனவாகக் கொள்ள வேண்டும். வரலாற்றாசிரிய சர் கால்டர் எலியட்டும் துறவியர் சிலைகளை மறைத்து வைத்தி க்கலாம் என்னும் கருத்தை எழுதியுள்ளார். - சூளாமணிமேல் சூழ்ந்த கல்லூரி

இடித்த கிறித்துவக் குருமார் நிலவதை அப்படியே வைத்து இதன்மேல் கட்டடம் எழுப்பி அதில் துன வனார் கல்லூரியை நிறுவினர். இக்கல்லூரி பின்னர் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப் பெற்றது. இப்போது இக்கட்டடம் அறமன்றங்களின் அலுவல் மன்றங்களாக உள்ளது. இப்போது இக்கட்டடத்திலுள்ள வழக்கறி ஞர்கள் அறைக்குக் கீழே இறங்கிச் செல்வதற்குரிய படிகள் இருந்த வாயில் மூடப்பட்டுள்ளது. ن.چ ع

கண்டெடுக்கப்பெற்ற 5 புத்தர் சி ைகளின் கதை நோக்கத் தக்கதும்; நோவத்தக்கதுமாகும்.

ஒரு சிலை பாரிசு நகர்ப் பாதிரி æTŲITGurtgör (Carayon) என்பாருக்கு அனுப்பப்பட்டது. மூன்று 8 லைகள் குவிண் கல்விச் சாலைக்குப் போயின. -

ஒன்று நாகையில் அமைந்த தூய வளனார் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் அங்கு வருகை தந்த சென்னை ஆளுநர் மாண்புமிகு நேப்பியர் பிரபுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

புத்தம் சிதைந்தது மட்டுமின்றிச் சிதறியதையும் இச்சிலைப் பகிர்வு காட்டியது. சிதறலும் சமயச் சிதறலாக இல்லை, பரிசுச் சிதறலாகப் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/247&oldid=585128" இலிருந்து மீள்விக்கப்பட்டது