பக்கம்:நாகப்பட்டினம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 233

உள்ளவை ஆறும் நிறைவு பெற்றவை. இவை அகச் சைவமாகச் சைவ சித்தாந்தம் தோன்றியது. 13 முதல் 18 வரை உள்ள ஆறும் ஒன்றாகிச் சைவசித்தாந்தத்தோடும் அகச் சைவத்தோடும் வேறுபட்டு அகப்புறச் சைவமாயிற்று. இவற்றுள் பாசுபதம் ஒன்று. இது முழுமை யாக வடவர் பாங்கு கொண்டது. திருநீறு பூசும் ஒன்றில் மட்டும் அகச் சைவத்திற்கு ஒத்தது. சடைமுடி தரித்தல். சிவனுக்கு உயிர்க் (மாந்தர் -நரபலி) காணிக்கைதருதல் என்று கொலையை ஏற்றது. அருளின் உருவகமானவன் சிவன். அன்பே சிவம் என்ற சிவனைச் சினம் (உருத்திரம்) கொண்ட உருத்திரனாகக் கண்டது. மூலமான இலிங்க வழிபாடு உண்டு. மண்டையோட்டைக் (கபாலம்) கையில்கொண்ட சிவனாகப் பார்த்த கபாலி'களுடன் ஒத்துப்போவது. இப்பாசுபத வழியினர் பாசுபதர் எனப்பட்டனர். இவர் மராட்டிய மாநிலத்துக் கார்வான் பகுதியினர். இவர் தமிழகத்துள் புகுந்தனர். நகரமைப்பு நாகை என்ற இந்நூற்பகுதியில் விளக்கப்பட்டவாறு இவர் வகுளிசர் என்பார் வழிவந்த காரோணத்தர்,

இவர்கள் தமிழகத்தில் மூன்று இடங்களில் கோயில்களைத் தம் பாங்கில் விரிவாக்கினர். இன்னார்க்குத் தமிழ்நாட்டை அப்போது ஆண்ட மன்னர் சார்பு இருந்தது. அதனைத் துணையாகக் கொண் டனர். இவர்கள் நாகைக் காரோணம்', 'குடந்தைக் காரோனம்", கச்சிக் காரோணம் என மூன்று கோயில்களை (முன்னிருந்த வைகளை) விரித்தனர். நாகைக் காரோணம் உருவாயிற்று. ஆறாம் நூற்றாண்டளவில் இங்கு அமைந்த காரோணர் அகச் சைவத்தின் மூலக் கோட்பாடுகளை விடத் தம் கோட்பாடுகளைப் பெருக்கினர். இவர் அமைத்த காரோணர் கோயிலாம் காரோணத்தைத்தான் தேவார மூவரும் பரவினர்; பாடினர். திருக்கோயில் கதைகள் (தல புராணம்)

கிருட்டிண தேவராயர் காலத்தில்தான் வட மொழித் "தலபுராணங்கள் எனப்பெறும் திருக்கோயில் கதைகள் புகுந்தன. தமிழ் நாட்டின் தொடர்பிலும் வடமொழியில் தலபுராணங்கள் எழுதப்பெற்றுக் கடவுட் பாங்குடன் பரப்பப்பட்டன. இவற்றில் பல தமிழிலும் பெயர்க்கப்பெற்றன. தேவார மூவர் பாடல்களில் இத்தல புராண வடவர் கருத்துக்கள் இடம் பெறவில்லை. ஆயினும் அவற்றின் நிழல்கள் தென்படுகின்றன. பின்னர் எழுந்த திருமாலிய (வைணவ ஆழ்வார் பாடல்களில் இந்த நிழலும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/251&oldid=585132" இலிருந்து மீள்விக்கப்பட்டது