பக்கம்:நாகப்பட்டினம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நாகபட்டினம்

"காரோணத்தெஞ்ஞான்றும் காணலாமே" என்று நிறைவு பெறும். திருத்தாண்டகம் மட்டும் 11 பாடல்களைக் கொண்டது. ஆனால் இது தன் பெயர் முத்திரை வைத்துப் பாடப்பெறும் கடை காப்புப் பாடல் அன்று. முதற் பதிகத்தின் முதற் பாடலாகிய "மனைவி, தாய், தந்தை, மக்கள் மற்றுளசுற்றம்" என்னும் பாடலும் திருத்தாண்டகத்தில் "வரிவண்டு தேனே பாட" என்னும் பாடலும் போற்றியில் பாடப் படுவனவாகும். முன் மூன்று பதிகங்களிலும் இறுதிப் பாடல்களில் இமயத்தைப் பெயர்க்க முனைந்த இராவணனை இறைவன் கால் கட்டை விரலால் அழுத்தியதைக் காணலாம். திரிபுரம் எரிந்தமை, காலனைக் காய்ந்தமை, சுடலையாடியமை, நஞ்சுண்டமை என்னும் சிவனார் அருளிப்பாடுகளைப் பாடல்தோறும் சூட்டியுள்ளார்.

"கடல்சூழ் நாகை கற்றார் பயில் கடல் நாகை, கல்லினால் மதில் நாகை, கதிகமழ் நாகை, சோலை குலவு நாகை, கலங்கள் சேர் கடல் நாகை" என்றெல்லாம் நாகை நகரை விவரித்துள்ளார். திருத் தாண்டகத்தில் "அந்தண் நாகை" என்று ஒன்பது பாடல்களில் வைத் துள்ளார். இத்திருத்தாண்டகம் மேலுமொரு சிறப்பைக் கொண்டது. இதில் 26 சைவத் திரு ஊர்களை அடுக்கிப் பாடியுள்ளமை ஒரு தனி அமைப்பாகும். 26 ஊர்களைப் பாடவேண்டும் என்று கருதிய தாலேயே இப்பதிகம் மட்டும் ஒரு பாடலை அதிகமாகப் பெற்றது போலும். இத்துணைத் திருவிடங்களிலும் இருப்பவனை "நாகைக் காரோணத் தெஞ்ஞான்றும் காணலாமே" என்று ஒவ்வொரு பாடலும் நிறைவு பெறுகின்றது. இஃது அப்பதிவுகள் நாகைக்குத் தந்த தனிச்சிறப்பு. "நாகைக் காரோணம் என்றும் சிந்தை செய்வானைப் பிரியாதிருக்கும் திருமங்கையே" என்று பாடியமையும் ஒரு சிறப்பு முத்திரையாகும். ஞானசம்பந்தர் வாய்மொழியில் "ஞானத் துறை வல்லார்’

திருஞானசம்பந்தர் குறிஞ்சிப் பண்ணிலும் செவ்வழிப் பண்ணிலும் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். இவர் பாடல்களின் கருத்தமைப்பில் எட்டாவது பாடல்கள் யாவும் இராவணன் இமயத்தைப் பெயர்த்ததைக் குறிக்கும். ஒன்பதாவது பாடல் திருமாலும் நான்முகனும் தேடியதைப் பாடும். பத்தாவது பாடல் சமணர் புத்தரைச் சாடும். இவ்வமைப்பிலே நாகைப் பதிகங்களும் அமைந்துள்ளன. நாகை நகரைக்"கடல் நாகை, கழிதழ் கடல்நாகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/258&oldid=585139" இலிருந்து மீள்விக்கப்பட்டது