பக்கம்:நாகப்பட்டினம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நாகபட்டினம்

வேண்டியுள்ளார். பூசிக்கொள்ளக் கத்துரி, கமழ்சாந்து முதலிய மணப்பொருள்கள், குளிர்ச்சிக்குக் கண்ணுக்குக் கண்ணாடி செலவிற்குப் பணம், உடைமைக்குத் தங்கக்கட்டி முதலியவற்றோடு உண்ணுவதற்குக் "கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்" என்றும் வேண்டியுள்ளார். இசுலாமியர் வாழ்ந்த ஊர் அன்றோ. புலவுச் சோறு சமையல் மணந்தது போலும். அதற்கென்று நிணப்புலவுச் சோறு கேட்கவில்லை. காய்கறி நெய்ச்சோறு (காய்கறிப் பிரியாணி) கேட்டுள்ளார்.

இவற்றைக் கேட்டு முழுமையாக ஒட்டாரமே செய்துள்ளார். "செல்வத்தை மறைத்து வைத்தீர்"; "கட்டியெமக்கு ஈவதுதான் எப்போது சொல்வீர் நஞ்சைக் கொடுத்த தேவர்க்கு அமுதைக் கொடுத்தீரே முடியாதா?

முன்பொருமுறை நல்கை (விருத்தி) கேட்டபோது திருப்பூந் துருத்தியில் போய் உட்கார்ந்து கொண்டீர். இப்போது கீழ்வேளூர் போனிரா திருவாரூரில் தந்த செல்வத்தில் பாதியாவது தர வேண்டும். இவற்றைத் தராமல் இருக்க நீர் ஒன்றும் வறுமை உடையவர் அல்லர். உம் கோயில் பண்டாரத்தி (கருவூலம்) லிருந்து எடுத்துத் தரலாம்.

"தாரீரேல் ஒருபோதும் அடியெடுக்க ஒட்டேன்" என்று மறியல் போராட்டம் நடத்தினார். "பாம்பைச் சீறச் செய்து சடைமுடியைக் காட்டி அச்சுறுத்த முடியாது; அஞ்சமாட்டேன்" என்று எதிர்த்தார்.

திருவிழிமிழலையில் காசு கொடுக்கவில்லையா? நாகையில் மட்டும் கொடுக்காதது ஏன்? கொடாவிட்டால் உன் "திருமேனி வருந்த வளைத்துக்கொள்வேன் (முற்றுகையிடுவேன்)" என்பனவெல்லாம் படு ஒட்டாரம் அன்றோ?

இவற்றிற்காகச் சிவனை மட்டும் பகடி செய்யவில்லை. "மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்" என்று முரு கனையும் "கணக்கின்றி உண்ணும் பெருவயிறன் கணபதி ஒன்று மறியாதவன்" என்று பிள்ளையாரையும் பகடிக்குள் வைத்தார்.

இவ்வாறெல்லாம் நான் ஒட்டாரம் செய்தால், "நாளை என்னைக் கண்ணறையன் (கண்ணோட்டமில்லாதவன்), கொடும்பாடன் (கொடியவன்) என்றெல்லாம் சொல்லக்கூடாது" என்றொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/260&oldid=585141" இலிருந்து மீள்விக்கப்பட்டது