பக்கம்:நாகப்பட்டினம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - நாகபட்டினம்

ஞானசம்பந்தன் கொண்ட தமிழ்ச் சொற்கள் போய் எவ்வாறெல்லாம் மாறின!

மறைக்காட்டு மனாளர் வேதாரண்ய புரீசுவரர் ஆனார். புற்றிடங் கொண்டார் வன்மீக நாதரானார். மாதிருக்கும் பாதியர் அர்த்த நாரீசுவரர் ஆனார். வெண்ணெய்ப் பெருமாள் நவநீத நாதர் ஆனார். பெரிய பெருமானடிகள் - பிரமபுரீசுவரர்; ஐயாறப்பர் பஞ்சநதேசுவரர்; தான்தோன்றியப்பர் சுயம்புநாதர் என்றெல்லாம் வட மொழிப் பிறப்பில் ஆயினரே.

இறைவன் மட்டுமா? அழகம்மை - செளந்தர்ய நாயகி, மலை வளர் காதலி - பர்வத வர்த்தனி: தேன்மொழிப் பாவை - மதுரவசனி ஆயினர்.

வண்டமர்பூங்குழலி, மட்டுவார் குழலி, மருவார் குழலி, ஏலவார் குழலி, வண்டுவார்குழலி, காரார்குழலி, சரிவார் குழலி, கருந்தார் குழலி என எத்துணை இனிய தமிழ்க் குழலிப் பெயர்கள் வழக் கற்றுப் போயின. இவை போன்று கருந்தடங் கண்னம்மை முதலாக எத்துணைக் கண்ணம்மைகள், கரும்படு சொல்லி முதலாக எத் துணை மொழியம்மைகள் பெயர் தெரியாது போயினர். இது தமிழுக் கும் அதன் வழியே தமிழர்க்கும் ஏற்பட்ட இழிவன்றோ? இவ்வழியில் கோயிலிலேயே தாய் மொழித் தமிழ் இல்லாது போயிற்றே.

இவை நிற்க, காரோணம் பற்றிய செய்தியைத் தொடர்வோம். அதன் கோயில் திருமரம் சுரபுன்னை என்னும் புன்னாகம். கடவுளின் பெயர்களோ காரோணர், காயாரோகனர், ஆதிபுராணர், சுந்தர விடங்கர், தியாகராசர் எனப் பெருகின.

காரோணரை வழிபட்டுப் பேறு பெற்றோர் மிகப்பலர்; பல தகுதியினராவர். திருமால் முதலாகக் கடவுளர் நால்வர், தேவர் இருபதின்மர்; புண்டரீகமுனிவர் முதலாக முனிவர் பதினொருவர்; அரிகேசரி முதலாக அரசர் எண்மர்; அதிபத்தர் முதலாக அடியவர் நால்வர்: ஆக நாற்பத்தொருவராவர். எழுப்பியவர்...? -

பாசுபதத்தாரால் தோற்றுவிக்கப்பெற்ற கோயிலை வளர்த்துக் கட்டியவன் ஒரு மன்னன்; அவன் பெயரைச் சாலீசுகன் என்கின்றது புராணம். வரலாற்றில் இப்பெயரில் மன்னன் இல்லை மணிமேகலைச் காப்பியத்தில் வரும் நெடுமுடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/264&oldid=585145" இலிருந்து மீள்விக்கப்பட்டது