பக்கம்:நாகப்பட்டினம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 நாகபட்டினம்

சுண்ணாம்புச் சிற்பங்கள் தெருவைப் பார்த்த பாங்கில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.

உள்ளே அமைந்த காட்சி மண்டபம் புதுவைப் பிரெஞ்சு அரசில் டுப்ளே காலத்தில் மொழி பெயர்ப்பாளராகப் (துவிபாஷி) பணி யாற்றிய திரு ஆனந்தரங்கம் பிள்ளையவர்களால் (கி.பி. 1720 - 1755) கட்டப்பட்டது. இதன் அறிகுறியாக ஒரு தூணில் இவரது திருவுருவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது.

ஆறுமுகமில்லா ஒரு முகர் - -

மூலவராகத் திருமுருகன் முடிசூடிய ஒரு தலை, நான்கு கை களுடன் உள்ளார். வள்ளி, தேவானை தாமரை மலரையும், குவளை மலரையும் கைகளிற் கொண்டு முடிசூடி நிற்கின்றனர். பின்னே மயில் உள்ளது. முன்னே அவர் ஊர்தியில் மற்றொன்றாகிய பிணி முகம் என்னும் யானை உள்ளது. தெற்கு முகமாகச் சிவலிங்கம் நந்தியுடன் உள்ளது. - -

கொற்றவை, தெட்சிணாமூர்த்தி, குபேரன், அகத்தியர், பிற் காலத்தில் அமைக்கப்பெற்ற ஒன்பது கோளவர் முதலிய அணுக்கத் திருவுருவங்கள் உள்ளன. - நாகைவரு ரெங்கன்

இக்கோவிலில் மெய்க்காவலராக இருந்த அழகு முத்துப் புலவர் தொழுநோயராய் - முருக அடியராய் முருகன் மேல் திருப்புகழ்", மெய்கண்ட வேலாயுத சதகம்", "மெய்கண்ட வேலவர் குறம்" என்னும் நூல்களைப் பாடியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் ஒரு செப்புத் திருமேனியும் ஒரு வழிபாட்டுக் கருங்கல் திருமேனியும் உள்ளன. இவர் காலத்தில் தான் புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை வருகை தந்து மண்டபம் எழுப்பினார். இதன் குறிப்பாக"நாகை வரு ரெங்கன் வாழி" (19) என்று தம் திருப்புகழில் பாடியுள்ளார்.

இக்கோயில் திருவிழா தைப்பூசத்தில் 10 நாள்களும், கந்த சட்டித் திருவிழா ஐப்பசியில் 10 நாள்களும் தொடர்ந்து நிகழும். சூரசம்காரமும், வள்ளி தேவானை திருமண விழாவும் சிறப் பானவை. இங்குள்ள இடும்பன் ஊர்தி புதுமையானது.

19.5.1978இல் இக்கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நிகழ்ந்தது. அருணகிரியார் பாடியுள்ள திருப்புகழ் காரோணர் கோயிலில் இடம் பெற்ற முருகனைப் பாடியதாகும். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டு. குமரன்கோயில் காலம் 17ஆம் நூற்றாண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/278&oldid=585159" இலிருந்து மீள்விக்கப்பட்டது