பக்கம்:நாகப்பட்டினம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 275

அப்போது அவருக்கு அகவை 40. அவருடனிருந்த இளம் ஆண்டவருக்கு அகவை 12. அப்துல் காதிறு என்னும் இயற்பெயர் கொண்ட இச்சான்றோர் இறையருள் பெயராக சாகூல் அமீது என்றும் சிறப்புற்று 'அப்துல் காதிறு, சாகூல் அமீது என்று வழங்கப் பெற்றார். -

பின் அலந்துக்காரர் கப்பலில் பர்மா சென்று பல அருளிப் பாடுகள் செய்து மீண்டார். பெரும் நாயகமான இப்பெரியார் தாம் பிறந்த திங்களாகிய சமாத்துல் திங்கள் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமையில் - தம் 68ஆம் அகவையில் - புகழுடம் பெய்தினார். இந்நாள் கி.பி. 1558 நவம்பர் 25ஆம் நாளாகும். அசரத்து நாயகமாகத் திகழ்ந்தவர் நாகூர் ஆண்டவரானார். தர்கா அமைந்தது - கந்தூரி எழுந்தது

அவர் விரும்பியவாறே அவர் உறைந்த இடத்தில் அவர் காலடி பதிந்த குறியீடுகள் கொண்டு அமைந்த இடத்தில் அடக்கம் செய்யப் பெற்றார்.

நாகூர் கர்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/293&oldid=585174" இலிருந்து மீள்விக்கப்பட்டது