பக்கம்:நாகப்பட்டினம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நாகபட்டினம்

நாகையிலிருந்து குறிப்பாக வெங்காயம் மிகுதியாக ஏற்றுமதியாயிற்று. சோவியத்து நாட்டிற்கும் நாகை வெங்காயம் வழங்கியது. இப்போதும் வெங்காய ஏற்றுமதி உண்டு.

'இறால் என்னும் பழுவகை மீன் வணிகம் மிகுதியாக நிகழ்கிறது. வெளிநாட்டிற்கும் இது செல்கிறது. மீனவர்களால் நாள்தோறும் பிடிக்கப்படும் பலவகை மீன்களும் நாகை நகரிலும் அண்டை மாவட்டங்களிலும் விற்பனையாகின்றன. மீனைக் காயவைத்துப் பக்குவப்படுத்திய கருவாடு விற்பனையாகிறது: ஊருக்குள் கூவியும் விற்கப்படுகிறது.

பேட்டை -

அங்காடியாகக் கூடி மொத்தமாகப் பொருள்களை வாணிபம் செய்யுமிடம் பேட்டை எனப்பெறும். இவ்வகைப் பேட்டைகள் இரண்டு நாகையில் இருந்தன. இப்போது பெயரளவில் உள்ளன. ஒன்று அக்கரைப்பேட்டை. இது கடற்கரையிலேயே உள்ளது. இங்கு மீன் மொத்த வணிகம் நிகழ்ந்தது. இப்போதும் கடலிலிருந்து படகில் மீன்கள் கொணர்ந்து இறக்கப்பட்டதும் கூடை கூடையாக ஏலத்தில் விற்கப்படுவதும் உண்டு. மற்றொன்று அந்தோணிப்பேட்டை. இது நகர்க்குப் புறத்தில் மேற்கே 1 கி. மீட்டரில் வேளாங்கன்னி சர்ச் சாலையில் உள்ளடக்கமாக உள்ளது. இங்குப் புடவைகள் மொத்தமாக விற்கப்பட்டன.

ஆ. வணிகத்தில் பொருள் மாற்று முறை

அஃக விலை

வணிகம் நாட்டுப் பொருளியலுக்கு அடிப்படையானது. பொருள் என்பது பொன், வெள்ளி முதலியனவாகவும் இருக்கலாம். பண்டங்களாகவும் இருக்கலாம். தம்மிடம் உள்ள ஒரு பண்டத்தை மற்றவருக்குக் கொடுத்து அவரிடமுள்ள பண்டத்தை மாற்றாகப் பெறுவது பண்டமாற்றம் எனப்பெறும்.

மிகத் தொன்மைக் காலத்தில் பண்டமாற்று முறையே நாட்டில் இருந்தது. தொடக்கக் காலங்களில் பண்டமாற்றிற்கு முதற்பண்டமாக நெல்தான் பயன்பட்டது. நெல் கொடுத்துப் பொன்னையும் பண்டங்களையும் பெறுதல், பொருளும் பண்டமும் கொடுத்து நெல் பெறுதல் என்று பண்டமாற்று தொடங்கியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/322&oldid=585203" இலிருந்து மீள்விக்கப்பட்டது