பக்கம்:நாகப்பட்டினம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 3.13

பிரிவுக் குழுக்களாகச் சென்றது. இதனைக் குலோத்துங்கன் காலத்தின் கி.பி. 1080ஆம் ஆண்டுக் கல்வெட்டு காட்டுகிறது. இவ்வாறெல்லாம் இடையூறு இன்றிச் செய்யக் குலோத்துங்கன் ‘உல்கு' என்னும் சுங்க வரியை நீக்கியது பெரும் வழி வகுத்தது. இன்னோர் வெளிநாடுகளில் குடியேறியும் அமர்ந்தனர்.

உலகில் பிற்காலத்தேதான் - அஃதாவது கி.பி.16இல்தான் மேலைநாட்டார் 'கிழக்கிந்தியக் கம்பெனி அமைத்து அரசு உதவியுடன் வணிகம் செய்து வந்தனர்.

கூடி வணிகம் செய்யும் கூட்டுறவுத்துறை கூட 1904இல் தான் உருவாயிற்று. தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவ்வகைக் குழுவை வணிகர் அமைத்தனர். நாகையும் இதில் பங்கு கொண்டதாகிறது.

பலபட்டடை -

பல கூலங்களை வைத்து வணிகம் செய்வது பலபடடடை எனப்பெற்றது. அக்காலத்தில் மளிகைப் பொருள்களும் பிற நுகர் சரக்குகளும் கொண்ட கடைகளின் ஒட்டுமொத்தப் பெயர் இந்தப் பல பட்டடை என்பது. இவ்வாறு வணிகம் செய்த தமிழ்ப் புலவர் ஒருவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனப் பெயர் பெற்றார்.

இப்பலபட்டடையார் செட்டி மக்களாக இருந்தனர்; இசுலாமிய ராகவும் இருந்தனர்.

தஞ்சாவூர் கொங்கனேசுவரர் கோயில் செப்பேட்டில், "பல பட்டடைச் செட்டியார் வற்த்தகாள் துலுக்கர்லெப்பை பதினெட்டுப் பட்டடை வற்த்தகாள் அனைவரும் (20) என்றுள்ளது. இன்னார் செட்டிக் குழுவினர், 18 வகை இசுலாமியக் குழுவினர். இக்குழுக் களில் நாகை வணிகர் இருந்தனர். இஃதும் ஒரு வணிகக் குழு வாகும். இன்னோர் உள்நாட்டில் வணிகம் புரிவோர். பல பட்டடைப் பேட்டை என்றொரு அங்காடி கூடும் வணிகக் களம் உண்டு.

நாகையில் வணிகக் குழுவாக அமைந்து வெளிநாட்டிற்குச் சென்றதுபோல் மேலைக்கடற்கரைக் கொல்லத்திலிருந்து வணிகக் குழுவினர் நாகைக்கு வந்து வணிகம், வாணிபம் செய்தனர். இன்னோர் கொல்லம் கொல்லாப்பூரிலிருந்து வந்தோர். அப்பெய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/331&oldid=585212" இலிருந்து மீள்விக்கப்பட்டது