பக்கம்:நாகப்பட்டினம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32ዕ நாகபட்டினம்

இன்னோர் மீன் பிடிப்பர். இன்னோர் முற்காலத்தில் ஆந்திரத் திலிருந்து வந்தோராகக் கொண்டு இவர்கள் தெலுங்கு பேசினர் என்றும் குறித்துள்ளனர். இவர்கள் செட்டி இனத்தைச் சேர்ந்தவர் கான்பர். n - படகரில் செம்படகர் என்பார் செம்படவர் என்னும் குடியின ராகக் குறிக்கப் பெறுவர். இவர்கள் சிறுவலை, அரிப்பு வலை. ஊத்தா என்னும் கூடை கொண்டும் தூண்டில் போட்டும் மீன் பிடிப்பர். -

நாகை நெய்தல் நில மண்ணின் மைந்தர் நுளையரும், பரதருமே. பரதரின் தலைவராக அரசர் நிலையில் (நம்பிராசா) ஒருவரைக் கொண்டனர். அவர் வழி வந்தோர் ஒரு தனிக் குலமாகக் கருதப்பெற்றுப் பரதவராச குலத்தார் எனப்பட்டனர். இவர்களையே புராணப் பாங்கில் பர்வதராச குலத்தார்' என்று கூறிக் கொள் கின்றனர். -

நெய்தல் நிலத் தெய்வமான வருணனைத் தொல்காப்பியம் "வருணன் மேய பெருமணல் உலகமும்" என்றது. நெய்தல் நில மக்களும் வருணன் குலத்தவராகக் கொண்டு வருண குலத்தவன் என்றனர். யாழ்ப்பாணத்துப் புலவர் வையாபுரி என்பவர் பாடிய 'வையா பாடல் என்னும் நூலில் மச்சமுறு கடலில் மனைத்தீவாரும் வருண குலத்தார் (31) என்று காட்டப்பட்டுள்ளன. இவருள் மன்னர் போன்ற செல்வன் வருணகுல ஆதித்தன்' என்றிருந்தான்.

உள்ளுரிலும் அண்மை ஊரிலும் மீன் விற்பனைத் தொழில் நடந்தது: இக்காலத்தில் வெளிமாநிலத்திற்கும் அவ்வழி வெளிநாட்டிற்கும் அனுப்பப்பட்டு ஒரு பெருந் தொழிலாகியுள்ளது. 3. உப்பளம்

மீன்பிடித் தொழிலுடன் இந்நிலத்துத் தொழில் உப்பளத் தொழிலும் அதனை விற்கும் தொழிலுமாகும். இத்தொழில், 'உமண்' எனப்பெறும்; செய்வோர் உமணர். செய்யும் வணிகம் உடன் சாத்து. ஏற்றிச் செல்லும் வண்டி உமண் வண்டி. இழுத்துச் செல்லும் பகடு 'உமண் எருது என்றெல்லாம் இலக்கியங்கள் அறிவிக்கின்றன.

மீன்பிடித் தொழில் பிடித்தோம் - வந்தோம் - விற்றோம் என்று முடிவது. உமண் தொழில் கரையில் பாத்தி உண்டாக்கிக்கடல் நீரைக் கட்டி, சூரிய வெப்பத்தில் உணக்கி, உப்பாக்கும் தொழில். இவ்வணிகம் பற்றி முன்னர்க் கண்டுள்ளோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/338&oldid=585219" இலிருந்து மீள்விக்கப்பட்டது