பக்கம்:நாகப்பட்டினம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 323

இறு அளவில் புத்தர் அமர்ந்த தோற்றத்தில் ஆயிரக்கணக்கில் இலைகள் வடிக்கப்பட்டுள்ளன. கீழை நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கீழைநாட்டுச் சிலைகளும் வந்துள்ளன.

இச்சிலைகளின் சிற்ப நுணுக்கம் இந்தோனீசியக் கலை வடிப்பின் பாங்கையும் கொண்டது. 6. நாணய வார்ப்பு

நாயக்கர் காலம் முதல் நாணய வார்ப்பு நாகையில் நடந்து வந்தது. ஆலந்துக்காரர் காலத்தில் மிகுதியாகவே இத்தொழில் நிகழ்ந்தது. L15ുഖങ്ങ8: உலோகங்களில் வார்க்கப்பட்டன: அடிக்கப்பட்டன. சிலவகை வடிவங்களையும் காணமுடிகிறது. தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டமை ஒரு சிறப்பு. மராத்தியர் இதனைக் "கம்பட்டம்" என்றமை கண்டோம்.

இத்தொழிலின் நினைவை நாணயக்காரத்தெரு எழுப்பிக் கொண்டுள்ளது. இப்போது நாணயம் உருவாகவில்லை என்றாலும் இத்தெருவின் கீழ்ப்பகுதி முழுமையாகப் பொன், வெள்ளி அணிகலன்கள் உருவாக்கப்படும் நகைக் கடைகளே உள்ளமை ஒரு பொருத்தமாகிறது. * 7. வெடி மருந்து

விழாக் காலச் சிறப்புக்குரிய வெடிகளுக்கும் பல வாணங் களுக்கும் ஒரளவில் போர்க்குண்டு வெடிப்புகளுக்குமாகும் மருந்து கள் இடித்தும், பொடித்தும், கலந்தும் உருவாக்கப்பட்டன. தொழில் நிகழும் இடமும் தேக்கி வைக்கும் இடமும் கொத்தளம் எனப்படும். நாகையில் மருந்துக் கொத்தளத்தெரு இன்றும் உள்ளது. 8. குடிசைத் தொழில்கள் -

முற்காலத்தில் மணிகளிலும், முத்துக்களிலும் துளையிடும் தொழிலும், கோக்கும் தொழிலும் நாகூரில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதற்கு உறுதியான அல்லது குறிப்பான சான்றும் இல்லை. ஆயினும் செவிவழிச் செய்திகள் உள்ளன. இஃது ஒரு குடிசைத் தொழில்

நாகூரில் குடிசைத் தொழிலாகப் பனை ஓலையில் தடுக்குகள், சிறு கொட்டான்கள், தூக்குப் பைகள், சிறுவர் விளையாட்டுப் பொருள்கள் முதலியன செய்யப்படுகின்றன. இவற்றை இசுலாமிய மகளிர் செய்கின்றனர். தலையில் வைத்துக் கொள்ளும் பனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/341&oldid=585222" இலிருந்து மீள்விக்கப்பட்டது