பக்கம்:நாகப்பட்டினம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 17

இங்கு க்ல் என்று குறிக்கப்படுவது வரலாற்றின் மைல் கல்' அன்று. கல்லுக்குக் கல் ஒர் அளவு விதிக்கப்பெற்று ஒரே அளவைக் கொண்டிருப்பதே மைல் கல். இங்கு அவ்வாறு வரலாற்றை இடைவெளி ஒத்துள்ள அடுக்கடுக்காகக் காண இயலவில்லை. 'எல்லைக்கல்லும் அன்று. உரிமை கொள்ள அளந்து எல்லையிடப் பெறுவது எல்லைக்கல். இங்கு உரிமையும் இல்லை. அளவு எல்லையும் இல்லை. எனவே, எல்லைக்கல்லும் அன்று. மற்று என்ன கல்? -

காலப்போக்கில் நிகழ்ந்த நிகழ்வுகளில் அடையாளங் காணுமாறு சுவடி பதிந்த நிகழ்வுகளைக் கொண்டு பதிவதால் இது வரலாற்று நிகழ்வுக்கல்.

இவ்வகையில் முதல் நிகழ்வுக்கல் ஊறுபாட்டால் நேர்ந்ததாக முன்னே கண்டதாகும். இரண்டாவது நிகழ்வுக்கல் இலந்தை செறிந்த மேட்டால் பெயர் பெற்ற பதரி திட்டா என்னும் இடப்பெயர் கொண்ட புத்தத் துறவுக்களம். இதன்காலம் முன்குறித்த ஏறத்தாழ கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவு.

மூன்றாவது, அசோகப் பெருமன்னன் எடுத்த பதரிதிட்ட விகாரை என்னும் நிகழ்வுக்கல். இது மிக உறுதி வாய்ந்ததாய் நிற்கும் கல். இக்கல் நாகை நிலத்தைப் புத்தத் திருத்தளமாகக் காட்டுவது. இதன் காலம் கி.மு. 270-265 இடைப்பட்டது.

நான்காவது சங்க இலக்கியம் நாட்டியுள்ள கல். இஃது ஆய்வில் கிடைக்கும் புதையல். திரைதர வந்த தொண்டைமான் இளந் திரையன் தொடர்புடன் வளர்ந்த இலக்கியம் காட்டுவது. பெரும்பாணாற்றுப்படைக்கல்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சங்கப்புலவர் பத்துப்பாட்டில் கரிகாற்பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவ னாகக் கொண்டு பட்டினப்பாலையையும், அவன் பெயரன் தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பெரும்பாணாற்றுப் படையையும் பாடியுள்ளார். பிற்கால ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன், அவன்மகன் இரண்டாம் இராசராச சோழன் ஆகிய மூவர் காலத்தும் உடன் வாழ்ந்து வந்தவர். மூவர் மேலும் நூல்கள் படைத்தவர். அவர் போன்றே சங்க கால உருத்திரங்

「ちT.2。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/35&oldid=584917" இலிருந்து மீள்விக்கப்பட்டது