பக்கம்:நாகப்பட்டினம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை 37 I

ஆனால் இன்றைய நாகைவாழ் மக்களின் நற்குணங்களைக் குறித்துக்காட்ட இயலும்.

"அடுப்பவர்க்கு இனிய நாகை" (4) என்று பிள்ளையவர்கள் பாடியதுபோல் உதவிசெய்யும் மனப்பான்மையர் நாகையர். உழைப் பில் சுறுசுறுப்பானவர். காலங்காலமாய்க் கடலோடு போராடியும் அலுக் - காத மீனவர். பத்துக் காசு வாணிபம் முதல் பல்லாயிரம் வணிகம் வரை விடாது தொடர்ந்து செய்யும் வணிகர். இறையன்பு மாறாதவர். சிற்றளவில் கடவுள் மறுப்புள்ளோர் உள்ளனர். திரைகடலோடிப் பொருளிட்டினாலும் தம் நகரை மறவாது ஓடி வந்து விடுபவர். இவ்வாறெல்லாம் குறிக்கும் அளவில் நாகை மக்கள் இன்று உள்ளனர்.

முற்காலத்திலும் இடைக்காலத்திலும் பலநாட்டு மக்களும் பல இனத்து மக்களும் வணிகத்திற்காக இங்கு வாழ்ந்தவர் அன்றோ. அதன் நிழலாக இன்றும் பலஇனத்து மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இனவேறுபாடு, சாதி வேறுபாடு, சமயப் பூசல், குழுமோதல் என்பன எட்டிப் பார்க்க விடாத மக்கள் நாகையர். பணக்காரன் ஏழை என்பதில் கூட பண்ணையார் - பண்ணையாள் என்னும், மேலவர் கீழவர் என்னும் வேறுபாடுகள் நாகை மக்களிடம் மிகமிகக் குறைவு. வேறுபட்ட சமய மக்கள் வாழினும் சமயக் காழ்ப்பு கொண்டவரோ, அதனால் பூசல் உண்டாக்க முனைபவரோ இன்று வரை இல்லை. இதற்குக் காரணம் சமய ஆர்வம், சமுதாய ஆர்வம் இவற்றிற்கு மேலாகத் தமிழ் ஆர்வம் நிறைந்தவர்கள் என்பதே.

"கற்றவர் பலபேர் குழாம்குழாம் ஆகிக் கலந்து வாழிடம் பலவால்" என்றபடி குழுக்கள் பல எவ்வகைக் கற்றவரிலும், அரசியல் கட்சியாளரிலும் இருந்தாலும் அனைவரும் கலந்து வாழ்பவர்கள்.

கடவுள் பற்று உள்ளவர் யாவரும் ஒழுக்கம் உள்ளவர் என்பதோ, கடவுள் மறுப்பாளர் அனைவரும் இழுக்கம் உள்ளவர் என்று சொல்லுவதோ உண்மையன்று. வேறுபட்டார் எங்கும் உள்ளமைபோல் இங்கும் உள்ளனர்.

எவ்வளவுதான் உயர்ந்தாலும் நடுஇரவிலே (மழைக்கு அன்றி) குடை பிடிப்பவர் இலர். குட்டுபவரும் இலர் குனிபவரும் இலர்: (எங்கும் பள்ளிகளில் கூட இது போய்விட்டது) ஒடுபவரும் இலர்: விரட்டுபவரும் இலர். . 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/389&oldid=585277" இலிருந்து மீள்விக்கப்பட்டது