பக்கம்:நாகப்பட்டினம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - ജ്ഞങ്ങ - நாகை 373

வேண்டும். சங்காலச் சான்றோர், சைவ நால்வர். திருமாலியப் பன்னிருவர். இசுலாமிய நபிகள். கிறித்துவச் சான்றோர் பகுத் தறிவுப் பெரியார் முதலியோர் விழாக்களாகத் திங்களுக்கொன்றாக நிகழ்த்தப்பெற வேண்டும். பண்பும் அமைதியும் உயிரோட்டமும் உடைய தாகவும், பழிப்பு, இழிப்பு தலைகாட்டாததாகவும் நிகழ்ச்சி நிகழ வேண் டும். சரி விழுக்காடு அனைத்து வகையினரும் உறுப்பினராக அமைய வேண்டும். இதனை முயற்சியுடனும் முனைப்பாகவும் அறிவார்ந்த நோக்கிலும் அரவணைப்புப் பாங்கிலும் ஆற்ற வேண்டும். . நகர மக்கள் பேரவை

இரண்டு: நாகூரில் நகர மக்கள் பேரவை அமைக்கப்பெற்று மாந்தரியல்பு குலையாமல் ஒற்றுமைப்பாங்கு தொடர விளம்பரங்கள் செய்ய வேண்டும். விழாக் காலங்களில் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும். பொது விழாக்களை மக்கள் ஒன்றிப்பு நிகழ்ச்சி களாகக் குமுகாய அமைப்பில் அமைக்க வேண்டும்.

பொதுவில் நாகை மக்களிடம் இயல்பாகவுள்ள நற்குணங்களை நிலை நாட்டும் பன்முக முயற்சிகள் தொடர்ந்தால் நாளைய நாகை மக்கள், நலம்நலியாமல் வளம் வாடாமல் அமைதி வாழ்வில் திகழ்வர். - -

ஊ. சமய நாகை

இன்றைய சமயம்

முன்னர்க்கண்டபடி புகுந்தமைந்த சமயங்களில் புத்தம் போக மற்றவை உள்ளன. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக எச் சமயரும் தேக்கம் பெறவும் இல்லை. புத்தாக்கம் கொள்ளவும் இலை. கிறித்து வத்தில் புதிதாகத் துவங்கப்பெற்ற ஒன்றிரண்டு பிரிவுகள் வாய்ப்பிற் கேற்ப இயங்குகின்றன. - - .

பொதுவில் சொல்லப்பெறும் இந்து சமயம் என்னும் சைவம். திருமர்லியம் அவ்வக் கோயில்களின் நாட்யூசெய்கள், சிறப்பு வழிபாடுகள், திருவிழாக்கள் என்ற வழக்கமான நிகழ்ச்சிகளே சமய நிகழ்ச்சிகளாக உள்ளன. பலகோயில்கள் திருப்பணி செய்யப் பெற்றுக் குடமுழுக்கைக் கண்டுள்ளன. தேவாரத் திருக்கூட்டம் ஒன்றிருந்தது இப்போது இல்லை என்னும் நிலைதான் உள்ளது. சிற்றளவு நடைமுறையாகச் சில நிகழ்ச்சிகள் புத்தாக்கமின்றி நிகழ்கின்றன. நாகையில் இன்றைய சமய நிலையில் குறிப்பிடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/391&oldid=585279" இலிருந்து மீள்விக்கப்பட்டது